Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மகிந்தவின் கொக்கரிப்பும் நலிவடைந்த அரசும் !

உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தயா­ரா­கி­விட்­டார். நாடு சின்­னா­பின்­ன­மா­கிக் கொண்­டி­ருக்­கி­றது, நாட்­டைப் பாது­காக்­க­வேண்­டும் என்­கிற முழக்­கத்­து­ட­ னேயே அவர் தனது பரப்­பு­ரையை பது­ளை­யில் ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்.

தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஒரு­பு­றத்­தில் நடுங்­கிக்­கொண்­டி­ருக்­கும்­போது மறு­பு­றத்­தில் மகிந்த மார் தட்­டிப் பேசு­கி­றார். மக்­கள் பலம் அதா­வது சிங்­கள மக்­க­ளின் பலம் தனக்­கே­யி­ருக்­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வேன் என்­கி­றார் அவர்.

சிங்­கள இன­வா­தம் மற்­றும் தேசி­ய­வா­தம்­தான் மகிந்­த­வின் பரப்­பு­ரை­யின் அடி­நா­தம் என்­பது அவ­ரது பேச்­சில் தெளி­வா­கத் தெரிந்­தது. ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஜனதா விமுக்தி பெர­முன (ஜே.வி.பி.)தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இணைந்து­தான் பத­வி­யில் இருக்­கின்­றன என்று அவர் கூறு­வ­தன் மூலம் சிங்­கள மக்­க­ளின் ஆன்­மா­வைத் தட்­டி­யெ­ழுப்ப அவர் முயல்­கி­றார்.

தமி­ழர்­க­ளோடு சேர்ந்து ஆள்­ப­வர்­க­ளையா தேர்ந்­தெ­டுக்­கப் போகி­றீர்­கள் என்று சிங்­கள மக்­க­ளின் மனங்­க­ளைச் சீண்­டு­கி­றார். அதற்­கூ­டா­கத் தனது ஆத­ர­வைப் பெருக்­கிக்கொள்ளக் கள்­ளத்­த­ன­மாக முயற்­சிக்­கி­றார்.

இந்­தப் பக்­கத்­தில் நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு பத­விக்கு வந்த கூட்டு அரசு ஆட்­சி­யைக் கொண்­டி­ழுப்­ப­தற்கே பெரி­தும் திண­றிக்­கொண்­டி­ருக்­கை­யில் மகிந்த பெரும் சங்­கல்­பத்­து­டன் ஆட்­சி­யைப் பிடிக்­கும் படி­யில் காலடி எடுத்து வைத்­துள்­ளார்.

பௌத்த சிங்­கள வாதத்­தின் நாடி­யைச் சரி­வ­ரப் புரிந்து வைத்­தி­ருக்­கும் மகிந்த, மிகத் தெளி­வா­கவே அதற்­குத் தீனி போடு­கி­றார். விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னுக்கே பயப்­ப­டாத நான், இந்த ஆட்­சி­ யா­ளர்­க­ளுக்கா பயப்­ப­டப்­போ­கின்­றேன் என்று அவர் சிங்­கள மக்­க­ளைக் கொம்பு சீவி விடு­கி­றார்.

2015 அரச தலை­வர் தேர்­த­லில் தமி­ழர் மற்­றும் சிறு­பான்மை மக்­க­ளின் வாக்­கு­க­ளின் பலத்­தால் தோல்­வி­யைத் தழு­விக்­கொண்ட மகிந்த, அதி­லி­ருந்து பாடங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டார் போன்று தெரி­ய­வில்லை. தன்­னைப் பெரும்­பான்­மைச் சிங்­கள மக்­க­ளின் கதா­நா­ய­க­னாக நிலை­நி­றுத்­து­வ­தன் மூலமே இந்­தத் தேர்­த­லை­யும் ,இனி­வ­ரும் தேர்­தல்­க­ளை­யும் எதிர்­கொள்­வ­தற்கு அவர் தயா­ரா­கி­விட்­டார் என்­ப­தையே பது­ளை­யில் அவர் ஆற்­றி­யி­ருக்­கும் உரை வெளிப்­ப­டுத்­து­ கி­றது.

ஆரம்­பமே இப்­படி அமோ­க­மாக இருக்­கும்­போது தேர்­தல் நெருங்க நெருங்க இன­வா­தம் இன்­னும் உச்­சம் பெறும் என்று துணிந்து எதிர்­வு­கூ­ற­லாம். இலங்­கை­யின் வர­லாற்­றில் இயல்­பா­கவே சிங்­கள இன­வா­தம் மேற்­கி­ளம்­பும்­போ­தெல்­லாம் தற்­காப்பு உத்­தி­யாக தமிழ் இன­வா­த­மும் முஸ்­லிம் இன­ வா­த­மும் மேற்­கி­ளம்­பு­வ­தும் தவிர்க்க முடி­யா­மல் நடந்தே வந்­தி­ருக்­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யா­னது.

ஆனால், இந்­தத் தடவை தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளின் பெரும்­பான்மை ஆத­ர­வைப் பெற்ற கட்­சி­கள் தீர்வு ஒன்­றுக்­கான முயற்­சி­யில் பய­ணிக்­க­வும் வேண்­டிய நிர்ப்­பந்­தம் கார­ண­மாக சிங்­கள இன­வா­தத்­திற்­குப் பதி­லீ­டான தமிழ் மற்­றும் முஸ்­லிம் இன­வா­தத்­தின் எழுச்­சியை போசிக்க முடி­யா­த­வை­யாக உள்­ளன.

ஒரு­பு­றம் பல­வீ­ன­மான ஆட்­சி­யா­ளர்­கள், மற்­றொ­ரு­பு­றம் இந்­தப் பல­வீ­ன­மான ஆட்­சி­யா­ளர்­க­ளு­டன் கூட்­டணி சேர்ந்­து­கொண்­ட­தன் மூலம் தாமும் பல­வீ­ன­மா­கி­யி­ருக்­கக்­கூ­டிய சிறு­பான்­மைச் சமூ­கம் என்­ப­வற்­றுக்கு மத்­தி­யில் மகிந்­த­வின் குரல் கொக்­க­ரிப்­பா­கவே ஒலிக்­கி­றது. ‘‘மக்­கள் பலம் எனக்­குத்­தான் இருக்­கி­றது என்­பதை இந்த உள்ளூ­ராட்சி சபைத் தேர்­த­லி­லும் உறு­திப்­ப­டுத்­து­வேன்’’ என்று அவர் மார் தட்­டி­யி­ருக்­கி­றார்.

ஆட்­சி­ய­மைத்து இரண்­டாண்­டு­க­ளில் நலிந்­து­கி­டக்­கும் மைத்­திரி -– ரணில் கூட்­டால் மகிந்­த­வின் எழுச்­சி­யைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யுமா? இந்­தக் கேள்­விக்­கான பதி­லில்­தான் நாட்­டி­ன­தும் சிறு­பான்மை மக்­க­ள­தும் எதிர்­கா­லம் தங்­கி­யி­ருக்­கி­றது.