பேராற்றுப் பாலமும் மக்களின் பிரச்சினைகளும்!

ஒட்­டு­சுட்­டான் – புதுக்­கு­டி­ யி­ருப்பு முதன்மை வீதி, கற்­சி­லை­மடு 3ஆம் கண்­டம், கனக இரத்­தி­ன­பு­ரம், மன்­னா­கண்­டல், முத்­து­ஐ­யன் கட்டு இட­து­கரை ஆகிய இடங்­க­ளுக்கு மக்­கள் அதிக அளவில் பயணிக்கும் முதன்மை வீதி­யா­கும்.

இந்த வீதி­யின் குறுக்­காக குறுக்­க­றுத்­துப் பாயும் மிகப் பெரிய ஆறே பேராறு ஆகும். இந்த ஆற்­றின் மீது அமைக்­கப்­பட்ட பாலம் 1960ஆம் ஆண் டில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. தற்­போது 57 வரு­டங்­க­ளைக் கடந்து விட்­டுள்ள இந்­தப் பால­மா­னது, உடைந்­தும் வெடித்­தும் ஆபத்­தான நிலை­யில் உள்­ளது. மழை காலங்­க­ளில் வெள்ள நீரு­டன், முத்து ஐயன் கட்­டுக்­கு­ளத்­தின் வான் நீரும் திறந்­து­வி­டப்­ப­டு­வ­தால் இவை­யி­ரண்­டும் ஒன்­றாக கலந்து சுமார் 4–5 அடி உய­ரத்­துக்கு மேலாக வெள்­ளம் பாய்­கின்­றது.

உடைவுகள் உள்ள பாலத்தினூடாகப் பயணிக்க அஞ்சும் பொதுமக்கள்

இந்­தப் பாலத்­தின் ஊடாக நடந்து செல்­வ­தற்­குக் கூட மக்­கள் அஞ்­சு­வ­து­டன், வாக­னங்­க­ளைக் கொண்டு செல்லவும் அச்­ச­மாக உள்­ளது. மழை நேரங்­க­ளில் பாலத்­தி­னூ­டாக மக்­கள் வைத்­தி­யசா­லை­க­ளுக்கோ அல்­லது பாட­சா­லை­க­ளுக்கோ அல்­லது வர்த்­தக நிலை­யங்­கள் மற்­றும் அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கோ செல்ல முடி­யா­த­நி­லை­யில் தமது பய­ணத்­தைக் கைவிட அல்­லது ஒத்­தி­வைக்க வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கின்­றது.

இந்­தப் பாலம் பற்றி கனக இரத்­தி­ன­பு­ரம் கிராம அபி­வி­ருத்தி சங்­கத்­தின் தலை­வர் தங்­க­வேல் கணே­சன் கருத்துத் தெரி­விக்­கை­யில், இந்­தப் பாலம் உயர்த்தி அகன்­ற­தாக நீர் பாயக் கூடி­ய­தா­கக் கட்­டப்­ப­டா­மல் சிறிய கொட்­டுக்­களை வைத்­துக் கட்­டப்­பட்டுள்­ளது. வீதி­யி­லி­ருந்த சுமார் நான்கு அடி பதி­வா­க­வும் கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. இத­னால் வெள்­ள­நீர் பாய்ந்து வரும்­போது மரங்­கள், குப்­பை­கள் யாவும் பாலத்தை அடைத்­து­வி­டு­வ­தால் நீர் வெளிச்செல்ல முடி­யாத நிலை­யில் பாலத்­துக்­குச் சேத­மேற்­பட்­டுள்­ளது.

இத­னா­லேயே இந்­தப் பாலம் இடிந்து காணப்­ப­டு­வ­து­டன் தூண்­க­ளும் சரிந்த நிலை­யில் உள்­ளன. அத்­து­டன் பாலத்­தின் மத்­தி­யில் பெரிய குழி­ யொன்று ஏற்­பட்­ட­தால் பொது­மக்­க­ளின் உதவியுடன் அதனை நிரப்பி உள்­ளோம்.

இந்தப் பகுதி மக்களது பிரயாணங்களுக்கு முக்கியமான பாலம் இது

இந்­தப் பாலம் எமது பாவ­னைக்கு மிக­வும் முக்­கி­ய­ மா­ன­தா­கும். இந்­தப் பாலத்தை விவ­சாய உள்­ளீ­டு­களை எடுத்­துச் செல்­ல­வும் வைத்­தி­ய­சாலை மற்­றும் அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கு செல்­ல­வும், பாட­சாலை மாண­வர்­கள் பாட­சா­லைக்­குச் செல்­ல­வும் பயன்­ப­டுத்த அச்­ச­மாக உள்­ளது. இது­பற்றி நாம் பல தட­வை­கள் அரச அதி­கா­ரி­கள் மற்­றும் அமைச்­சர்­கள், மாகாண சபை உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் தெரி­வித்­துள்­ளோம்.

அவர்­கள் வந்து பார்­வை­யிட்­ட­னரே தவிர புன­ர­மைப்­புச் செய்ய எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை.
இந்­தப் பாலத்­தைப் புன­ர­மைக்க எமது கிராம அமைப்­பின் ஊடாக ஒரு சிறு­ப­குதி பணத்­தைக் கொடுக்­க­வும் முன்­வந்­தோம். பயன் இல்லை. ஒவ்­வொரு வரு­ட­மும் மழை­வெள்­ளம் வரும்­போது நாம் படும் துன்­பங் களை யார் அறி­வார்­கள்?

இந்­தப் பாலத்­தின் ஊடாக எமது சிறார்­கள் பாட­சா­லைக்­குச் சென்று மீண்­டும் திரும்பி வரும்­வரை நாம் அச்­ச­ நிலை­யி­லே­யே­தான் இருக்க வேண்­டி­யுள்­ளது. கடந்த காலங்­க­ளில் எமது சிறார்­கள் தவ­ணைப் பரீட்சை எழு­வ­தைக் கூடத் தவற விட்­டி­ருக்­கி ­றார்­கள். இந்த நிலை தொடர்ந்­தும் ஏற்­பட வேண்­டுமா? தேர்­தல் காலங்­க­ளிலே அர­சி­யல்­வா­தி­கள் வாக்­கு­று­தி­களை சர­மா­ரி­யாக வழங்­கு­வார்­கள்.

ஆனால் நடப்­பது எது­வு­மில்லை. சில சம­யம் வெள்­ளம் ஏற்­பட்டு நாம் எந்­த­வொரு இடத்­தி­னா­லும் வெளி­யேற முடி­யாத நிலை­யில் வெள்­ளம் வடி­யும்­வரை காத்­தி­ருந்­த­தும் உண்டு.இந்­தப் பாலம் புன­ர­மைக்­கப் ப­டா­வி­டில் பார­தூ­ர­மான ஆபத்­துக்­களை எதிர்­நோக்க வேண்­டி­வ­ரும் என எண்ண வேண்­டி­யுள்­ளது.

இது­மட்­டு­மல்ல, எமது பிர­தே­சத்­தில் உள்ள உள்­ளக வீதி­கள் கூடப் புன­ர­மைக்­கப்­ப­டாத நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன. கற்­சி­லை­ம­டு­வி­ருந்து முத்து ஐயன்­கட்டு சென்­ற­டை­யும் வீதி­யிலுள்ள இரட்­டைக்­கண் பாலம் உடைந்­துள்­ள­தால் மக்­கள் பய­ணம் செய்ய இய­லாது அவ­லப்­ப­டு­வ­தைக் கூட எவ­ரும் கவ­னத்­தில் எடுக்­க­ வில்லை.

பல ஆண்டுகளாக புனரமைப்பற்ற பாதைகள்

ஒட்­டு­சுட்­டான்– புதுக்­கு­டி­யி­ ருப்பு முதன்மை வீதி­யி­லி­ ருந்த கற்­சி­லை­மடு, கணே­ச­
பு­ரம், முத்­து­ஐ­யன் கட்­டு­கு­ளம், தட்­டை­யர்­மலை ஊடாக இட­து­கரை வரை சென்­ற­டை­யும் வீதி கடந்த 35–40 வரு­டங்­க­ளாக புன­ர­மைப்­பின்றி வீதி­கள் இரு­ம­ருங்­கி­லும் பற்­றை­கள் சூழ்ந்து வீதியே மிக­வும் பாதிப்­ப­டைந்­துள்­ளது. அதில் சேவை­யில் ஈடு­பட்ட பேருந்துச் சேவை­க­ளும் கைவிடப்பட்டு விட்டன.

ஏனைய மாவட்­டங்­க­ளுடனும் பிர­தே­சங்­க­ளுடனும் ஒப்­பி­டும்­போது எமது பிர­தே­சம் பின்­தங்­கியே காணப்­ப­டு­கின்­றது . ஒட்­டு­சுட்­டான்– புதுக்­கு­டி­யி­ ருப்பு இணைந்த பிர­தேச சபை தனித்­த­னி­யா­கப் பிரிக்­கப்­பட வேண்­டும். இவை இணைக்கப்பட்டு உள்ள மையே எமது பிர­தே­சத்தின் பின்­ன­டைவுக்குக் கார­ண­மாக அமை­கின்­றது.

இந்­தப் பகுதி மக்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து வீதி­கள் புன­ர­மைக்­கப் ப­டு­வ­து­டன்முதன்மை வீதி­யில் உள்ள பாலங்­க­ளை­யும் புன­ர­மைக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­ம்– எனத் தெரி வித்துள்ளார்.

You might also like