ஜெரு­ச­லே­மில் பதற்­ற­நிலை!

இஸ்­ரே­லின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை அறி­விக்க அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் திட்­ட­ மிட்­டுள்­ளார் என்று தக­வல்­கள் வெளி­வந்த நிலை­யில், அவ­ரின் இந்த முடி­வைக் கண்­டித்து கிழக்கு ஜெரு­ச­லே­மில் பலஸ்­தீ­னர்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

ஜெரு­ச­லேம் பலஸ்­தீ­னத்­தின் முக்­கி­ய­மான நக­ரம். இதை தற்­போது இஸ்­ரேல் ஆக்­கி­ர­மித்து வைத்­துள்­ளது.
அங்கு குடி­யிருப்­புக்­க­ளை­யும் நிறுவி அதை தனது நக­ர­மாக இஸ்­ரேல் மாற்­றி­யுள்­ளது. இதற்கு ஐ.நா. சபை உள்­ளிட்ட பல அமைப்­புக்­க­ளும், ஐரோப்­பிய நாடுகள் பல­வும் கண்­ட­னம் தெரி­வித்த போதி­லும் இஸ்­ரேல் எவற்­றை­யும் கண்­டு­கொள்­ள­வில்லை.

அமெ­ரிக்­கா­வின் ஆசீர்­வா­தத்­து­டன் அது தான் நினைத்­ததை நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றது. இந்த நிலை­யில் இஸ்­ரே­லின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை அறி­விக்க அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் திட்­ட­ மிட்­டுள்­ளார் என்று கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் தக­வல்­கள் வெளி­வந்­தன.

இதை­ய­டுத்து ட்ரம்­புக்கு எதி­ராக கொதித்­தெ­ழு­கின்­ற­னர் பலஸ்­தீ­னர்­கள். கிழக்கு ஜெரு­ச­லேம், மேற்­குக் கரை, வெஸ்ட் பாங் உள்­ளிட்ட பகு­தி­க­ளில் அவ்­வாறு ஆர்ப்­பாட் டங்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. ஆர்ப்­பாட்­டக் காரர்­கள் மீது இஸ்­ரேல் பொலி­ஸார் கண்­ணீர்­புகை, தடி­யடி நடத்­தி­யதை அடுத்து தற் போது பதற்­றத்­தில் உள்­ளது ஜெரு­ச­லேம்.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like