சிரியாவில் 24 மணி­நே­ரத்­தில் 30 முறை தாக்­கு­தல்!

சிரி­யா­வின் ஹமோ­ரியா நக­ரில் நேற்­று­முன்­தி­னம் மட்­டும் சுமார் 30 தட­வை­கள் ரஷ்யா தாக்­கு­தல் நடத்­தி­யது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிரி­யா­வில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்­கிய உள்­நாட்டுப் போர் 6 ஆண்­டு­ களைக் கடந்­தும் நீடித்து வரு­கி­றது. மற்­றொ­ரு­பு­றம் அங்கு ஐ.எஸ்.

ஆயு­த­தா­ரி­க­ளின் ஆதிக்­க­மும் இருந்து வரு­கி­றது. ஐ.எஸ். ஆயு­த­தா­ரி­களை அழிப்­ப­தற்கு அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­டுப்­ப­டை­கள் சிரி­யா­வில் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றன.

அதே­போல் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக ரஷ்யா வான்­வ­ழித் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.

தலை­ந­கர் டமஸ்­க­ஸின் அருகே உள்ள ஹமோ­ரியா நக­ரில் நேற்­று­முன்­தி­னம் மட்­டும் சுமார் 30 தட­வை­கள் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டன. இந்­தத் தாக்­கு­தல்­க­ளில் 27 பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like