ட்ரம்­பின் முடிவு பலஸ்­தீ­னத்­தால் ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்­ளப்­படா!

‘‘ஜெரு­ச­லேம் தொடர்­பான அமெ­ரிக்­கா­வின் முடிவைப் பலஸ்­தீ­னம் ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்­ளாது’’ என்று தெரி­வித்­தார் பலஸ்­தீன அதி­பர் அப்­பாஸ்.

ஜெரு­ச­லேமை இஸ்­ரே­லின் தலை­ந­க­ராக அமெ­ரிக்கா அங்­கீ­க­ரிப்­ப­தாக, அதி­பர் ட்ரம்ப் அடுத்த வாரம் அறி­விக்­கக்­கூ­டும் என்று அமெ­ரிக்­கா­வின் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்­குப் பதி­ல­டி­யா­கவே அப்­பாஸ் இவ்­வாறு தெரி­வித்­தார்.

கடந்த 48 மணி­நே­ரத்­தில் இரண்­டா­வது தட­வை­யாக அப்­பாஸ் இந்­தக் கருத்தை முன்­வைக்­கி­றார்.

‘‘ட்ரம்­பின் இந்த முடிவு இரு நாடு­க­ளுக்­கும் இடையே பெரும் அர­சி­யல் விளைவை ஏற்­ப­டுத்­தும் என்று பலஸ்­தீன அர­சி­யல் தலை­வர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­த­னர். இஸ்­ரே­லின் தலை­ந­க­ர­மாக ஜெரு­ச­லேமை அறி­விக்­கும் அமெ­ரிக்­கா­வின் எந்த நட­வ­டிக்­கை­யும் பலஸ்­தீ­னம் – இஸ்­ரேல் இடையே எதிர்­கா­லத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் சமா­தான முடி­வு­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கப் போகி­றது. அமெ­ரிக்­கா­வின் இந்த முடிவை பலஸ்­தீ­னர்­கள், அரே­பி­யர்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள்’’ என்று அப்­பாஸ் மேலும் தெரி­வித்­தார்.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like