அமெ. – தென்­கொ­ரியா கூட்­டுப் போர்ப் பயிற்சி!

வட­கொ­ரி­யா­வின் ஏவு­க­ணைச் சோத­னையை அடுத்து, அமெ­ரிக்­கா­வும் தென்­கொ­ரி­யா­வும் இணைந்து கூட்­டுப் போர்ப் பயிற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன. ஏற்­க­னவே இந்த இரு நாடு­க­ளின் இரா­ணு­வச் சிப்­பாய்­க­ளும் கூட்­டுப் போர்ப் பயிற்­சி­யில் ஈடு­பட்டு வந்­தா­லும் தற்­போது அவை இரட்­டிப்­பாக்­கப்­பட்­டுள்­ளன என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

கண்­டம் விட்­டுக் கண்­டம் பாயும் மேம்­ப­டுத்­தப்­பட்ட ரகத்­தைச் சேர்ந்த ஏவு­க­ணையை கடந்த வாரம் சோதித்­தது வட­கொ­ரியா. இதற்கு அமெ­ரிக்கா, ஜப்­பான், தென்­கொ­ரியா, ஐ.நா. சபை ஆகி­யன கடும் கண்­டம் தெரி­வித்­தன. கொரி­யத் தீப­கற்­பத்­தின் பதற்­றம் மேலும் அதி­க­ரித்­துள்­ளது.

இந்த நிலை­யில் அமெ­ரிக்­கா­வும், தென்­கொ­ரி­யா­வும் கூட்­டுப் போர்ப் பயிற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக இரண்டு நாடுக­ளி­ன­தும் வானூர்­திப் படை­கள் தொடர்ந்து பயிற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன என்று சொல்­லப்­ப­டு­கி­றது.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like