அப்­துல்­லா­வை கொன்­று­விட்­ட­தாக ஹெளதி அறி­விப்பு!

ஏம­னின் முன்­னாள் அதி­பர் அலி அப்­துல்­லா­வைக் கொலை செய்­த­தாக ஹெளதி ஆயு­தக் குழு அறி­வித்­தது. அது தொடர்­பான ஒளிப்­ப­டங்­க­ளை­யும் ஹெளதி ஊட­கங்­கள் வெளி­ யிட்­டுள்­ளன.

ஏமன் அர­சுக்கு எதி­ராக ஆயு­தப் போராட் டத்­தில் ஈடு­பட்டு வரு­கி­றது ஹெளதி. தலை­ந­கர் சனா­வின் பெரும் பகுதி ஹெள­தி­யின் பிடி­யி­லேயே உள்­ளது. ஏமன் அர­சுக்கு ஆத­ர­வாக சவூதி தலை­மை­யி­லான கூட்­டுப்­படை போரிட்டு வரு­கி­றது.

இந்த நிலை­யில் ஏமன் அதி­ப­ரின் மாளி­கை தமது தாக்­கு­த­லில் தரை­மட்­ட­மா­னது. அதி­லி­ருந்த அப்­துல்லா உயி­ரி­ழந்­தார் என்று ஹெளதி அறி­வித்­தது. ஹெள­தி­யின் இந்த அறி­விப்­புக்கு ஏமன் அர­சின் தரப்­பில் இருந்து எந்த விளக்­க­மும் வழங்­கப்­ப­ட­வில்லை.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like