இலங்கை அணி திடீர் தடுமாற்றம்!

இந்­தி­யா­வுக்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் ஆட்­டத்­தின் இரண்­டா­வது இன்­னிங்­ஸில் திடீர் தடு­மாற்­றம் கண்­டது இலங்கை அணி.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்று முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது இந்­திய அணி.

அந்த அணி 7 இலக்­கு­களை இழந்து 536 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை­நி­றுத்­து­வ­தாக அறி­வித்­தார் கோக்லி.

அதி­க­பட்­ச­மாக கோக்லி 243 ஓட்­டங்­க­ளை­யும், முரளி விஜய் 155 ஓட்­டங்­க­ளை­யும், ரோகித் சர்மா 65 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் சன்­ட­கன் 4 இலக்­கு­க­ளை­யும், கமகே 2 இலக்­கு­க­ளை­யும், டில்­ரு­வான் பெரேரா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­யி­ருந்­த­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய இலங்கை அணி நேற்­று­முன்­தின மூன்­றாம்­நாள் முடி­வில் 9 இலக்­கு­களை இழந்து 356 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்­தது. சந்­தி­மல் 147 ஓட்­டங்­க­ளு­ட­னும், சன்­ட­கன் ஓட்­ட­மெ­தை­யும் பெறா­ம­லும் நான்­காம் நாளுக்­காக நேற்­றுக் கள­மி­றங்­கி­னர்.

150 ஓட்­டங்­களை நிறை­வு­செய்­தார் சந்­தி­மல். அவர் 164 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழக்க இலங்கை அணி 373 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.

பந்­து­வீச்­சில் இசாந் சர்மா, அஸ்­வின் இரு­வ­ரும் தலா 3 இலக்­கு­க­ளை­யும், சமி, ஜடேயா இரு­வ­ரும் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

தவற விடாதீர்கள்:  பிறீ­மி­யர் லீக் தொட­ரில்- கெய்ல் சதம்!

163 ஓட்­டங்­கள் முன்­னி­லை­யு­டன் இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்­தது இந்­தியா. விரை­வாக ஆட்­டத்தை இடை­நி­றுத்­து­வ­தைக் கருத்­திற் கொண்டு அடித்­தா­டி­யது.

5 இலக்­கு­களை இழந்து 246 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது. அதி­க­பட்­ச­மாக தவான் 67 ஓட்­டங்­க­ளை­யும், ரோகித் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 50 ஓட்­டங்­க­ளை­யும், கோக்லி 50 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

இலங்­கைக்கு இலக்­காக 410 ஓட்­டங்­கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டது. நாள் முடி­வில் இலங்கை அணி 3 இலக்­கு­களை இழந்து 31 ஓட்­டங்­க­ளைப் பெற்றது.

இறு­தி­நா­ளான இன்று இலங்­கை­யின் வெற்­றிக்கு மேல­தி­க­மாக 379 ஓட்­டங்­க­ளும், இந்­தி­யா­வின் வெற்­றிக்கு 7 இலக்­கு­க­ளும் தேவைப்­ப­டு­கின்­றன.

 

You might also like