2019ஆம் ஆண்­டு­வரை ஓய்­வென்­பது இல்லை -யுவ­ராஜ்

எதிர்­வ­ரும் 2019ஆம் ஆண்டு வரை ஓய்வு முடிவை அறி­விக்­கப்­போ­வ­தில்லை என்று தெரி­வித்­தார் இந்­திய அணி­யின் சக­ல­துறை வீர­ரான யுவ­ராஜ். இந்த அறி­விப்­பின் மூலம் யுவ­ராஜ் அடுத்த உல­கக்­கிண்­ணத் தொடரை இலக்­கு­வைத்­துள்­ளார் என்று கரு­தப்­ப­டு­கி­றது.

இந்­திய அணி 2007ஆம் ஆண்டு ரி-–20 உல­கக்­கிண்­ணத் தொட­ரை­யும், அதன் பின்­னர் 2011ஆம் ஆண்டு உல­கக்­கிண்­ணத்­தை­யும் கைப்­பற்ற முக்­கிய கார­ண­மாக இருந்­தார் யுவ­ராஜ். உடற் தகு­தி­யில் தொடர்ந்து தோல்­வி­யைச் சந்­தித்து அணி­யில் இருந்து அவர் ஒதுக்­கப்­பட்­டுள்­ளார்.

யுவ­ரா­ஜின் கிரிக்­கெட் வாழ்க்கை கிட்­டத்­தட்ட முடி­வு­ கா­ணும் நிலை­யில் உள்­ளது என்று தக­வல்­கள் வெளி­வ­ரும் நிலை­யில் 2019ஆம் ஆண்டு வரை ஓய்­வில்லை என்று அவர் தெரி­வித்­தார்.

‘‘நான் தோல்­வி­ய­டைந்து கொண்­டி­ருக்­கி­றேன் என்­பதை கட்­டா­யம் சொல்ல வேண்­டும். இத­னால் நான் கவ­லைப்­ப­ட­வில்லை. நான் ஏற்­றம் இறக்­கத்தைக் கண்­டுள்­ளேன். ஒரு­வர் வெற்றி நாய­க­னாக வர­வேண்­டும் என்­றால், தோல்வி தேவை, தோற்­க­டிக்­கப்­பட வேண்­டும். அந்த தோல்வி அவரை வலு­வான நப­ராக மாற்­றும். அது அடுத்த கட்­டத்­துக்கு அழைத்­துச் செல்­லும்.
நான் இன்­னும் விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கி­றேன். எந்த வகை­யான கிரிக்­கெட் நோக்கி சென்று கொண்­டி­ருக்­கி­றேன் என்று எனக்­குத் தெரி­யாது. ஆனால், எனக்கு வய­தா­கி­விட்­ட­தால், முன்பை விடக் கடு­மை­யாக உழைக்­கி­றேன். நான் 2019ஆம் ஆண்டு வரை விளை­யா­டு­வேன். அதன்­பி­றகு எனது முடிவை அறி­விப்­பேன்’’ என யுவ­ராஜ் மேலும் தெரி­வித்­தார்.

தவற விடாதீர்கள்:  டக்கெட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

You might also like