6 வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ளு­டன் இந்­தியா அணி அறிவிப்பு

தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொட­ருக்­காக 6 வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ ளைக் கொண்டு இந்­திய அணி செல்­கி­றது. தென்­னா­பி­ரிக்க ஆடு­க­ளங்­கள் வேகப்­பந்து வீச்­சுக்­குச் சாத­க­மா­னவை என்­ப­தா­லேயே வேகப்­பந்து வீச்சை அடித்­த­ள­மாக வைத்து இந்­திய அணி அறி­விக்­கப்­பட்டது.

இந்­திய அணி விவ­ரம் – விராட் கோக்லி (தலை­வர்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், தவான், புஜாரா, ரகானே (துணைத் தலை­வர்), ரோகித் சர்மா, சகா, அஸ்­வின், ஜடேயா, பார்­தீவ் பட்­டேல், பாண்­டியா, புவ­னேஸ்­வர் குமார், சமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பும்ரா.

மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆட்­டங்­க­ளுக்­கான இந்­திய அணி­யில் தொடர்ச்­சி­யாக இடம்­பி­டித்து சிறப்­பாக பந்­து­வீ­சி­வந்த வேகப்­பந்து வீச்­சா­ளர் பும்ரா, முதல்­மு­றை­யாக டெஸ்ட் ஆட்­டங்­க­ளுக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளார்.

அவ­ருக்கு விளை­யா­டும் பதி­னொ­ரு­வர் கொண்ட குழா­மில் இடம் வழங்­கி­னால் பலம் வாய்ந்த தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ராக அவர் தனது அறி­மு­கத்தை மேற்­கொள்­வார்.

தவற விடாதீர்கள்:  டக்கெட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

You might also like