லகிரு கமகே மீண்­டும் வெளியே!

இலங்கை -– இந்­திய அணி­க­ளுக்கு இடை­யில் தற்­போது நடை­பெற்­று­வ­ரும் டெஸ்ட் ஆட்­டத்­தின் நான்­காம் நாளான நேற்­றும் இலங்கை அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் லகிரு கமகே ஆட்­டத்­தில் இருந்து வெளி­யே­றி­னார். காற்­று­மாசே அவர் வெளி­யே­றி­ய­மைக்­கான கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­திய அணி தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கும்­போது, 6ஆவது பந்­துப்­ப­ரி­மாற்­றத்­தில் கமகே மைதா­னத்­தில் வாந்­தி­யெ­டுத்­தார். இதை­ய­டுத்து அவர் ஓய்­வ­றைக்கு அழைக்­கப்­பட்­டார்.

11ஆவது பந்­துப்­ப­ரி­மாற்­றத்­தில் கமகே மீண்­டும் அணி­யில் இணைந்­து­கொண்­டார். டெல்­லி­யில் நில­வும் காற்­று­மா­சால் நடை­பெற்­று­வ­ரும் இந்த ஆட்­டத்­தில் இலங்கை வீரர்­கள் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்ற குற்­றச்­சாட்டு உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

தவற விடாதீர்கள்:  சம்­பி­ய­னா­னார் ஹமில்­டன்

You might also like