ரி–-20 தொட­ரி­லும் இல்லை கோக்லி

இலங்­கைக்கு எதி­ரான ரி-–20 தொட­ருக்­கான இந்­திய அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு­நாள் தொட­ரைத் தொடர்ந்து ரி–-20 தொட­ரி­லும் கோக்­லிக்கு ஓய்வு கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய அணி விவ­ரம்– – ரோகித் (தலை­வர்), லோகேஸ் ராகுல், ஸ்ரோஸ், பாண்டே, டினேஸ் கார்த்­திக், டோனி, பாண்­டியா, வொஷிங்­டன் சுந்­தர், சாகல், யாதவ், ஹூடா, சிராஜ், பாசில் தம்பி, உன­கட்.

இலங்­கைக்கு எதி­ரான தொடர்­கள் முடிந்த பின்­னர் ஒரு­சில நாள்­கள் இடை­வெ­ளி­யின் பின்­னர் தென்­னா­பி­ரிக்­காவை அதன் சொந்த மண்­ணில் வைத்து இந்­திய அணி எதிர்­கொள்­கி­றது. இலங்­கைத் தொட­ரின் பின்­னர் தென்­னா­பி­ரிக்­கத் தொட­ருக்­குத் தயா­ரா­வ­தற்கு போதிய அவ­கா­சம் தனக்கு இல்லை என்று கோக்லி தெரி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து இலங்­கைக்கு எதி­ரான ஒரு­நாள் தொட­ரில் இருந்து கோக்லி விடு­விக்­கப்­பட்­டார். தற்­போது ரி-–20 தொட­ரில் இருந்­தும் அவர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

தவற விடாதீர்கள்:  விடைபெறுகிறார் கெவின் பீற்றர்சன்

You might also like