பொலிஸ் மா அதிபரின் கூற்றை நிராகரித்தார் அமைச்சர் சாகல

காலி கிந்­தோட்டைச் சம்­ப­வத்­தில் பொலி­ஸார் அச­மந்­தப் போக்­கு­டன் செயற்­பட்டார்கள் என பொலிஸ்மா அதி­பர் கூறிய கருத்­து­டன் நான் ஒரு­போ­தும் இணங்­க­மாட்­டேன். பொலி­ஸா­ரின் அர்ப்பணி ப்­பா­­லேயே பிரச்­சினை கட்­டுப்­பாட்­டுக்­குள் வந்­தது. இவ்­வாறு சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­தார்.

‘‘காலி, கிந்­தோட்­டை­யில் மோதல் உக்­கி­ர­ம­டைந்த போது சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரின் எண்­ணிக்­கையை குறைத்­தமை தவ­றா­கும். இந்­தச் சம்­ப­வத்­துக்குப் பொலி­ ஸா­ரின் அச­மந்­தமே கார­ணம் என்று பொலிஸ் மா அதி­பர் கூறி­யுள்­ளார். பொலிஸ் அச­மந்தப் போக்­குக்குப் பொறுப்­புக் கூறக் கூடி­ய­வர் யார்’’ என்று மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­ வ­ரும் எதிர்க்­கட்­சி­யின் பிர­தம கொற­டா­வு­மான அநுரகுமார திசா­நா­யக்க நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னார்.சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் சாகல தெரி­வித்­த­தா­வது:

காலி கிந்­தோட்­டைச் சம்­ப­வம் தொடர்­பாக 134 பேரி­டம் வாக்­கு­மூ­லம் பெற்­றுள்­ளோம். தற்­போது இது குறித்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு ­கின்­றது. இந்­தச் சம்­வத்­தால் சேத­ம­டைந்த வீடு­கள் மற்­றும் சொத்­து­ைட­மை­க­ளின் சேதம் இனங்­கா­ணப்­பட்டு இழப்­பீடு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இது என்­னு­டைய அமைச்­சு­டன் சம்­பந்­தப்­பட்­ட­தல்ல.

தவற விடாதீர்கள்:  23 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது!

மோத­லின் போது சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் அகற்­றப்­பட்­ட­தாக அநு­ர­கு­மார கூறி­னார். அதனை நான் நிரா­க­ரிக்­ கின்­றேன். காலி கிந்­தோட் டைச் சம்­ப­வம் ஏற்­பட்ட முதல் நாள் அதி­க­ள­வி­லான சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னரைப் பாது ­காப்­புக்கு அமர்த்­தி­னோம். இரண்­டாம் நாளன்று பிரச்­சினை தீர்­வுக்கு வரு­வ­து­போன்று தென்­பட்­ட­மை­யால் சிறப்பு அதி­ரடி படை­யி­ன­ரின் எண்­ணிக்­கை­யைக் குறைத் ­தோம். அதி­ர­டிப் படை­யி­னர் நீக்­கப்­ப­ட­வில்லை.

அதி­ர­டிப் படை­யி­னரை நீக்­கு­மாறு எவ­ரும் உத்­த­ர­வி­ட­வும் இல்லை. பின்­னர் நிலமை மோச­ம­டைந்­த­மை­யால் அதி­ர­டிப் படை­யி­ன­ரின் எண்­ணிக்கையை அதி­க­ரித்­தோம்.

அந்­தப் பகு­தி­யில் சிங்­க­ள­வர் ­க­ளுக்­கும் முஸ்­லிம்­க­ளுக் ­கும் இடை­யில் ஏற்­பட்ட முரண்­பா­டு­களைச் சமா­தான நிலமைக்குக் கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. அந்­தப் பகு­தி­யின் 7 கிராம அலு­வ­லர் பிரி­வை உள்­ள­டக்கி மதத் தலை­வர்­கள், புத்­தி­ஜீ­வி­கள், சிவில் அமைப்­புக்­கள் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர். நிலமை சுமு­க­மா­கி­யுள் ­ளது – – என்­றார்.

‘பொலி­ஸா­ரின் அச­மந்­தப் போக்கே கார­ணம் என்று பொலிஸ் மா அதி­பர் கூறி­யுள்­ளார். அப்­ப­டி­யா­யின் அவர் பொலிஸ் அச­மந்­தம் என்று யாரைக் கூறு­கின்­றார். பொலிஸ் அச­மந்தப் போக்­குக்குப் பொறுப்புக் கூறக் கூடி­ய­வர் யார்?’ என்று அநு­ர­கு­மார மீண்­டும் கேள்வி எழுப்­பி­னார்.

தவற விடாதீர்கள்:  பாட­சா­லை­க­ளில் பாலி­யல் துர்­ந­டத்­தை வலயக் கல்­விப் பணி­மனை எடுத்த நட­வ­டிக்கை என்ன?

‘பொலிஸ் மா அதி­ப­ரின் கூற்றை நான் முற்று முழு­தாக எதிர்­க்கின்­றேன். அதற்­கும் நான் ஒரு­போ­தும் இணங்­க­மாட்­டேன். இந்­தச் சம்­ப­வம் நாடு முழு­வ­தும் விரி­வ­டை­வ­தைப் பொலி­ஸா­ரின் செயற்­பாட்­டின் ஊடா­கவே தடுக்க முடிந்­தது. இதன்போது பொலிஸார் பெரும் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்’ என்று சாகல குறிப்பிட்டார்.

You might also like