முட்டைக்கூட்டு!!

தேவையானவை

அவித்த முட்டை – 4
வெங்காயம்(நறுக்கியது) – 1கப்
பச்சை மிளகாய் (நறுக்கியது) – 3
தக்காளி (நறுக்கியது) – 1 கப்
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும். பின்னர் சீரகம், இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். அதோடு சீவி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்துக் கிளறவும். இப்போது வற்றல் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். அரை கப் தண்ணீர் ஊற்றி மெதுவாகக் கிளறவும். இப்போது உப்புச் சேர்க்கவும்

இது கொதிக்கத் தொடங்கியதும் முட்டையை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் கொதிக்கும் மசாலாவோடு சேர்க்கவும். முட்டையின் மஞ்சள் கரு உடையாதபடி மெதுவாக கலக்கவும்.

தவற விடாதீர்கள்:  டெவல் மீன்

 

You might also like