மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்

தேவையானவை

மரவள்ளி கிழங்கு – அரைக் ‌கிலோ
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – கா‌ல் தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கா‌ல் தேக்கரண்டி
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

மரவள்ளிக் கிழங்கைத் தோல் உரித்து சிப்ஸ் வடிவ‌த்‌தி‌ல் சீவிக் கொள்ளவும்.

இ‌ந்த ‌கிழ‌ங்கு ‌சீவலை அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் வைத்து காய வைக்கவும்.

சட்டியில் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி‌க் கா‌ய்‌ந்தது‌ம், ‌‌கிழ‌ங்கு ‌சீவலை சி‌றிது ‌சி‌றிதாக‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாகப் பொ‌ரி‌‌த்து எடு‌க்கவு‌ம்.

பொ‌ரி‌த்தவ‌ற்றை எண்ணெயை வடி‌த்து வேறு பாத்திர‌‌த்‌தி‌ல் எடு‌த்து வை‌க்கவு‌ம்.

‌சி‌‌ப்‌ஸ் சூடாக இருக்கும் போதே, தேவையான அள‌வி‌ற்கு மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வை‌த்து‌க் கொ‌ண்டு தேவையானபோது சாப்பிடலாம்.

மிகவும் சுவைாயன ‌மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ் ரெடி

தவற விடாதீர்கள்:  டெவல் மீன்

You might also like