மசாலா இட்லி 

தேவையானவை

இட்லிமா – 4 கப்

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 3

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

எண்ணெய் – 2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

கடுகு – அரை தேக்கரண்டி

சோம்பு – அரை தேக்கரண்டி

உளுந்து – அரை தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிது

 

செய்முறை 

மாவை சின்னச் சின்ன இட்லிகளாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (இதற்கென்றே கடைகளில் சின்னக் குழிகளுடன் குக்கர் இட்லித் தட்டுகள் கிடைக்கின்றன). அல்லது பெரிய இட்லிகளாகச் செய்து அதை நான்காக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கவும். சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, சோம்பு, உளுந்து, தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அதில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதில் அரை ரம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு இட்லிகளைப் பரிமாறவும்.

தவற விடாதீர்கள்:  டெவல் மீன்

You might also like