புகையிரத இயந்திர சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

புகையிரத இயந்திர சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனா்.

புகையிரத இயந்திர சாரதி உதவியாளர்களை சேவைக்கு உள்வாங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனா்.

இதன் மூலம் 300 இற்கும் அதிகமான புகையிரத பயண சேவைகள் இரத்தாகவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்தாா்.

கடந்த ஒக்டோபர் மாதம் ரயில் இயந்திர சாரதி உதவியாளர்களை சேவைக்கு உள்வாங்கும் முறைமை தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டது.

எனினும், அந்தக் குழுவின் தீர்மானம் வெளிவருவதற்கு முன்னதாகவே, புகையிரதத்துறை அதிகாரிகள், புகையிரத இயந்திர சாரதி உதவியாளர்களை சேவைக்கு உள்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனா்.

You might also like