ஹொலிவூட்டில் அறிமுகமாகும் நடிகர் நெப்போலியன்!

பாரதிராஜா இயக்கிய ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட நெப்போலியன், படிப்படியாக வளர்ந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்தார்.

கிராமத்து கதை மற்றும் கம்பீரமான பொலிஸ் பாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகர் நெப்போலியன் பின்னர் அரசியலில் பங்கேற்று மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருபவர், இப்போது ஹொலிவூட்டில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

‘டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் த நைன் ரூஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், நெப்போலியன் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

‘டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் த நைன் ரூஜ்’ படத்தில் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக நடிக்கிறார் நெப்போலியன். இந்தப் படத்தில் நெப்போலியன் நடித்திருக்கும் சில ஒளிப்படங்கள் மூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

”ஆங்கிலம் தெரியாது என்றாலும் “ஆங்கிலம் பேசத் தெரியாது என மறுத்தும் இயக்குநர் நீங்கள் தான் நடிக்கவேண்டும் என அடம் பிடித்தார். உங்களுக்கு ஓய்வு நேரத்தில் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி நடிக்கவைத்தார்” எனக் கூறியுள்ளார் நெப்போலியன்.

திகில் கதை தொடர் கொலைகள், அமானுஷ்யங்களுடன் கூடிய திகில் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. அமெரிக்காவில் தொழிலதிபராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டெல் கணேசன் இப்படத்தை தயாரிக்க, சாம் லோகன் கலேகி இயக்குகிறார். ஹாலிவுட் நடிகர்கள் ஜெஸி ஜேன்சன், பாபி லேனென், ஜான் சி.பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

பின்னணி பாடகரும், நடிகருமான தேவன் ஏகாம்பரம் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

You might also like