மீசாலையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

மீசாலையில் சற்று முன் நடந்த விபத்தில் ஒருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.

சாவகச்சேரியிலிருந்து மீசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளே விபத்தில் சிக்கினர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் வீதியில் நிறுத்தப்பட்ட காரொன்றின் கதவு திறக்கப்பட்டதால் மோதி விழுந்தனர் என்றும், பின்புறம் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்மீது ஏறியது என்றும் தெரிவிக்கப்பட்டது.

65 வயதுடையவரே உயிரிழந்தார்.

தவற விடாதீர்கள்:  வடக்கு மீன­வர்­களை வதைக்­கும் இந்­தியா!

You might also like