காதலுடன் கை சேர்ந்தார் ஸ்ருதி!

ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்வுக்கு நடிகை ஸ்ருதி ஹாஸன், தனது காதலர் மைக்கேலுடன் சென்றார்.

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவுக்கும், வினோதினிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்வில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதியுடன் கலந்து கொண்டார்.

ஸ்ருதி தனது காதலரான மைக்கேல் கோர்சேலையும் உடன் அழைத்துச் சென்றார்.

லண்டனைச் சேர்ந்த நாடக நடிகரான மைக்கேல் தமிழர் கலாச்சாரப்படி பட்டு வேட்டி, சட்டை கட்டி திருமண நிகழ்வில் பங்கேற்றார்.

திருமண நிகழ்ச்சியின் போது மைக்கேலும், ஸ்ருதியும் ஜோடியாக ஒரு சோபாவில் அமர்ந்திருந்தனர். அதற்குப் பக்கத்து சோபாவில் கமல் ஹாஸன் அமர்ந்திருந்தார்.

ஸ்ருதியும், மைக்கேலும் காதலிப்பதாகக் கூறப்படும் நிலையில் அவர்கள் ஜோடியாக திருமணத்திற்கு வந்துள்ளனர். மேலும் கை கோர்த்து ஒளிப்படங்களும் எடுத்துள்ளனர்.

You might also like