Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மக்கள் நலன் என்னும் போலி நாடகம்!

உள்ளூராட்சித் தேர்­தல் களே­ப­ரங்­கள் தீவி­ர­மாகி இருக்­கின்­றன. அதி­லும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமிழ்க் கட்­சி­க­ளி­டையே புதிய அணி உரு­வாக்­கங்­கள், தாவல் கள் எல்­லாம் தீவி­ரப்­பட்­டுள்­ளன.

பங்­கீ­டு­க­ளில் காணப்­ப­டும் இணக்­க­மின்­மை­கள் மேலும் மேலும் புதிய குத்­துக் க­ர­ணங்­க­ளைக் காட்­டக்­கூ­டும் என்­கிற அறி­கு­றி­கள் தெரி­கின்றன.

இவற்­றில் வேடிக்கை என்­ன­வென்­றால், எல்­லாக் கட்­சி­ க­ளும் நபர்­க­ளும் தமது அர­சி­யல் சுய­ந­லன்­க­ளுக்­கா­கவே இந்த முடி­வு­களை எடுக்­கின்­ற­போ­தும் அந்த முடி­வு­கள் அனைத்­தும் மக்­கள் நலன்­க­ளுக்­கா­கவே எடுக்­கப்­ப­டு­வ­தாக மக்­களை நம்ப வைக்க முற்­ப­டு­வ­தும், உண்மை தெரிந்­து­கொண்டே மக்­க­ளும் அதை நம்­பு­வது போன்று நடிப்­ப­தும்­தான்.

உள்ளூராட்­சித் தேர்­தல் அறி­விக்­கப்­பட்ட உட­னேயே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இருந்து ஈபி­ஆர்­எல்­எவ் பிரிந்­து­ செல்­வ­தாக அறி­வித்­தது. அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­சு­டன் அந்­தக் கட்சி அணி சேரும் என்று முத­லில் அறி­விக்­கப்­பட்­ட­போ­தும் பின்­னர் அது நடக்­க­வில்லை.

பதி­லா­கத் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யு­டன் அந்­தக் கட்சி கூட்­டுச் சேர்ந்­தது. அது தொடர்­பான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஒன்­றில் இரு கட்­சி­ க­ளும் நேற்­றுக் கைச்­சாத்­திட்­டன.

இந்த அணி­யில் வந்து சேர்ந்­து­கொள்­ளு­மாறு ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­யின் தலை­வர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் விடுத்த அழைப்பை தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் நிரா­க­ரித்­து­விட்­டார்.
அதற்கு அவர் முன்­வைத்­தது இரண்டு கார­ணங்­கள்.

விடு­த­லைப் புலி­கள் இருந்த காலத்­தி­லேயே கூட்­ட­ணி­யின் சின்­ன­மான உதய சூரி­ய­னைக் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக் காக விட்­டுக்­கொ­டுக்­க­மாட்­டேன் என்று தெரி­வித்து புலி­ க­ளுக்­கும் கூட்­ட­மைப்­புக்­கும் எதி­ராக நடந்­து­கொண்­ட­வர் அவர், அத­னால் அது­போன்­ற­தொரு நிலமை எதிர்­கா­லத்­தில் புதிய கூட்­டுக்­கும் வராது என்­பது என்ன நிச்­ச­யம் என்­பது அவ­ ரது முத­லா­வது கார­ணம்.

கொள்கை அடிப்­ப­டை­யில் வடக்கு, கிழக்கு இணைப்பை மறுப்­ப­வரா­க­வும் 13ஆவது திருத்­தச் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் தீர்வு வழங்­கி­னால் போதும் என்று சொல்­ப­வ­ரா­க­வும் இருக்­கும் கூட்­ட­ணி­யின் தலை­வர் ஆனந்த சங்­க­ரி­யு­டன் தமது கட்­சி­யின் கொள்கை ஒத்­துப்­போ­காது, எனவே இணைவு சாத்­தி­ய­மில்லை என்­பது இரண்­டா­வது கார­ணம்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இருந்து பிரிந்து செல்­வ­தற்கு ஈபி­ஆர்­எல்­எவ் முன்­வைத்­த­வை­யும் இந்த இரண்­டா­வது கார­ணமே. தமிழ் அர­சுக் கட்சி இதில் விட்­டுக்­கொ­டுப்­பு­டன் நடப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல என்று கூறி­விட்டே சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் வெளி­யே­றி­னார். ஆனால், கூட்­ட­மைப்­பை­விட விட்­டுக்­கொ­டுப்­பு­டன் நடந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­வ­ரான சங்­க­ரி­ யு­டன் சேர்­வ­தில் அவ­ருக்­குப் பிரச்­சினை ஏது­மில்லை.

அவ­ருக்கு மட்­டு­மல்ல, கூட்­ட­ணி­யு­டன் சேர்ந்­துள்ள மற்­றைய தரப்­பு­க­ளான தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட சிலர், முன்­னாள் போரா­ளி­கள் என்று சொல்­லப்­ப­டு­வோர் சிலர் ஆகி­யோ­ரும் அண்­மைக் கால­மா­கத் தமிழ் அர­சுக் கட்சி கொழும்பு அர­சு­டன் அதி­கம் விட்­டுக்­கொ­டுப்­பு­டன் நடந்­து­வ­ரு­கின்­றது என்று விமர்­சித்­த­வர்­களே!

இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக பங்­கீட்­டில் தமக்கு அதி­க­ளவு இட­ஒ­துக்­கீடு வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தால் ரெலோ கட்­சி­யும் இந்த அணி­யில் சேர்­வது குறித்து பேச்சு நடப்­ப­தாக நேற்றுச் செய்­தி­கள் வந்­த­வண்­ணம் இருந்­தன. ஒரே கூட்­ட­மைப்­பில் இருந்­தா­லும் மற்­றக் கட்­சி­க­ளை­யும் சம­மாக மதித்து அவர்­க­ளை­யும் சேர்த்­தி­ணைத்­துச் செல்­லும் வகை­யில் அல்­லா­ மல் எல்­லாம் வேண்­டும் என்­பது போல தமிழ் அர­சுக் கட்­சி­யும் நடந்து வரு­கின்­றது.

ஆக மொத்­தத்­தில், ஒரு சில விதி­வி­லக்கு அர­சி­யல்­வா­தி­க­ளைத் தவிர அர­சி­யல் என்­பது வெறு­மனே கட்சி நலன் சார் தொழிலே தவிர மக்­கள் நலன் சார் செயற்­பாடு அல்ல என்­பதை இந்த உள்ளூ­ராட்­சித் தேர்­தல் அர­சி­யல் நிரூ­பித்­து­விட்­டது. ஆனால், இதை­யெல்­லாம் மறைத்­து­விட்டு தமிழ் மக்­க­ளின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கா­க­வும் அவர்­க­ளின் நலனை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வும் நேர்­மை­யான அர­சி­யல் தீர்வு ஒன்றை மக்­க­ளுக்­குப் பெற்­றுத் தரு­வ­தற்­கா­க­வும்­தான் தாங்­கள் அர­சி­யல் செய்­கி­றோம் என்று கட்­சி­க­ளும் அர­சி­யல்­வா­தி­க­ளும் கூசா­மல் பொய் சொல்­வ­தில்­தான் அவர்­க­ளின் வெற்­றி­யும் தோல்­வி­யும் அடங்­கி­யி­ருக்­கி­றது என்­ப­து­தான் வேடிக்கை.