மக்களது மன அழுத்த நிலையை மாற்றத்தக்க செயற்பாடுகள் பயன்மிக்கவை

பண்ணை உல்லா­சப் பட­குச் சேவை பரீட்­சார்த்­த­மாக ஆரம்­பித்து வைக்­கப்­பட்­ட­தான பத்­தி­ரி­கைச் செய்தி யைக் கண்­ணுற்­றேன். போர்ச்­சூ­ழல் கார­ண­மாக துன்ப துய­ரங் க­ளுக்கு ஆட்­பட்­ட­ மக்­க­ளது மன அழுத்­தத்­தைக் குறை­வ­டை­யச் செய்ய சில நட­வ­டிக்­கை­கள் அவ­சி­யம்.

உல்­லா­சப் பட­குச்­சேவை என்­பது கூட ஒரு வகை­யில் உள­நல மேம்­பாட்­டுக்­கான திட்­டமே. அனை­வ­ரா­லும் தாங்­கிக்­கொள்­ளத் தக்­க­வாறு இதற்கான கட்­ட­ணம் அற விடப்படல் நல்­லது. அதை­வி­டுத்து பணக்­கா­ரர்­க­ளுக்கு மட்­டு­மே­யான உல்­லா­சப் பய­ண­மாக அது அமைந்­து­வி­டக் கூடாது. சாமா­னி­யர்­க­ளும், ஏழை­க­ளும், குறிப்­பாக சிறு­வர்­க ­ளு­டன் வரும் பெற்­றோ­ரும் இதனை அனு­ப­விக்­கக் கூடி­ய­தாக இருக்க வேண்­டும்.

இது­வெ­றும் கட­லில் சிறிது தூரம் சென்­று­ வ­ரும் உல்­லா­ச­மாக மட்­டும் அமை­யாது, காலப் போக்­கில், கொழும்­புத்துறைக்­கும் யாழ்ப் பாணத்­துக்­கும் இடை­யி­லான கடற்­போக்­கு வ­ரத்து மார்க்­க­மா­க­வும் இடம்­பெறவைக்கலாம்.

போய்­வ­ரும் வழி­யில் பாசை­யூ­ரில் தரித்­தும் மக்­களை ஏற்றி இறக்­க­லாம். குறிப்­பாகக் கொண்­டாட்டக் காலங்­க­ளில் யாழ்.நக­ரில் சன நெரிசலைக் குறைக்­க­வும், விபத்­துக்­க­ளைத் தவிர்ப்­ப­தற்­கும் உத­வு­ம் வகையிலான ஓர் உல்­லா­சப் பய­ண­மா­க­வும் இது அமை­யும். இவை யாழ். மாந­கர சபையை உள்­ள­டக்­கிய பகு­தி­களே.

தவற விடாதீர்கள்:  இவர்கள் திருந்துவார்களா?

காலப் போக்­கில், வட மாகாண சபை­யால், கொழும்­புத்­துறை, பாசை­யூர், குரு­ந­கர், யாழ்ப்­பா­ணம், பண்ணை போன்ற பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து மண்­ணித் தலை போன்ற பூந­க­ரிப் பிர­தே­சங்­க­ளுக்­கும் உல்­லா­சப் பய­ணப் பட­குச் சேவை­களை சுற்­று­லாப் பய­ணி­களை ஈர்க்­கும் முக­மா­க­வும் உள்­ளூர் சுற்­று­லாவை மேம்­ப­டுத்­தும் முக­மா­க­வும் தொட­ர­லாம்.

சங்­குப்­பிட்டி பாலம் அடைக்கப்பட்ட முன்னர், அரச உத்­தி­யோ­கத்­தர்­கள் பலர் கொழும்­புத்­துறை மணி­யந்­தோட்­டப் பகு­தி­யில் தற்­கா­லி­க­மாக அமைக்­கப்­பட்ட துறை­மு­கத்­திலி­ருந்து பூந­க­ரிக்­கும் பட­குப் பய­ணத்தை மேற் கொண்­ட­னர். மோட்­டார் சைக்­கள், துவிச்­சக்க­ர­ வண்­டி­கள் போன்­ற­வற்­றை­யும் சுமந்து மழை, வெயில் படாது பய­ணிக்­கத்­தக்­க­தாக பட­கு­க­ளும் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதன் பிதா­ம­க­னாக அம­ரர் கு.இரா­ச­நா­ய­கத்தினது சிந்தனையில் உருவான இந்தத் திட்டத்தின் பயன்­பாட்டை அறிந்து கொள்­ள­வும், பய­ணி­கள் இந்­தப் பட­குப் பய­ணத்­தில் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­களை அறிந்து கொள்ள சம்­பந்­தப்­பட்ட நிர்­வா­கத் தரப்­பி­னர் கள் இப் பட­கு­க­ளில் தாமும் அடிக்­கடி பய­ணம் மேற்­கொள்­வது பய­னு­டைத்து. திட்­ட­மி­டல்
மட்­டு­மல்ல, கண்­கா­ணிப்­பும், அதற்­கேற்ற முறையில் திட்­டங்­க­ ளில் தேவை­யான வேளை­க­ளில் தேவை ­யான மேம்­பா­டு­களை மேற்­கொள்­வ­தும் குறித்­த­தொரு திட்­டம் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட உத­வி­க­ர­மாக அமை­யும்.

தவற விடாதீர்கள்:  இவர்கள் திருந்துவார்களா?

செ.செல்வராசா, அரியாலை.

You might also like