இஸ்­ரே­லின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேம்!- கிளம்பும் கடும் எதிர்ப்பு!

இஸ்­ரே­லின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை அறி­விக்­கும் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப்­பின் முடி­வுக்கு பிரான்ஸ் அதி­பர் மக்­ரோன் கடும் கண்­ட­னம் தெரி­வித்­தார்.

கிழக்கு ஜெரு­ச­லே­மி­லேயே பலஸ்­தீ­னர்­க­ளின் மூன்­றா­வது புனித மசூதி உள்­ளது. அந்­தப் பகு­தியை இஸ்­ரேல் தற்­போது ஆக்­கி­ர­மித்து வைத்­துள்­ளது. அங்கு குடி­யி­ருப்­புக்­க­ளை­யும் நிறுவி அதைத் தனது தேசம் என்று அது அண்­மைக்­கா­ல­மாக சொந்­தம் கொண்­டாடி வந்­தது.

இதற்கு ஐ.நா. சபை கடும் கண்­ட­னம் தெரி­வித்த போதி­லும் எந்த எதிர்ப்­பை­யும் இஸ்­ரேல் கண்­டு­கொள்­ள­வில்லை. இஸ்­ரே­லுக்கு அமெ­ரிக்கா பெரும் பல­மாக உள்­ளது. இந்த நிலை­யில் ஜெரு­ச­லேமை இஸ்­ரே­லின் தலை­ந­க­ராக தற்­போது அறி­விக்­க­வுள்­ளது அமெ­ரிக்கா.

அமெ­ரிக்­கா­வின் இந்த முடி­வுக்கு ஐரோப்­பிய நாடான பிரான்ஸ் கடும் கண்­ட­னம் தெரி­வித்­தது.

‘‘அமெ­ரிக்­கா­வின் இந்த முடிவு ஒரு­த­லைப்­பட்­ச­மா­னது. இஸ்­ரே­லின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை அறி­விக்­கும் முடிவு பலஸ்­தீ­னம், இஸ்­ரேல் இடையே எதிர்­கா­லத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டும் பேச்­சுக்­க­ளுக்கு பெரும் ஆபத்தை ஏற்­ப­டுத்­தும்’’ என்று மக்­ரோன் மேலும் தெரி­வித்­தார்.

பிரான்ஸ் மட்­டு­மல்­லா­மல் துருக்­கி­யும் அமெ­ரிக்­கா­வுக்கு கடும் கண்­ட­னம் தெரி­வித்­தது.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like