பாகிஸ்தானுக்கான நிதியை குறைத்தது சீனா!

பாகிஸ்­தா­னின் பலு­சிஸ்­தான் பகு­தி­யில் உள்ள குவா­த­ரில் சீன அரசு மிகப் பெரிய துறை­மு­கத்தை நிர்­மா­ணித்­துள்­ளது. குவா­தர் துறை­மு­கத்­தை­யும் சீனா­வின் ஜின்­ஜி­யாங் மாகா­ணத்­தை­யும் இணைக்­கும் வகை­யில் ஒரு லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பில் நெடுஞ்­சாலை அமைக்­கப்­பட்டு வரு­கி­றது.

திட்­டப் பணி­க­ளில் முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து குறித்த திட்­டத்­துக் கான நிதியை நிறுத்தி உத்­த­ர­விட்­டுள்­ளது சீனா.

குவா­தர்-­ஜின்­ஜி­யாங் நெடுஞ்­சாலை பலு­சிஸ்­தான், ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீர் வழி­யாக செல்­கி­றது. நெடுஞ்­சா­லை­யோ­ரம் உள்ள பலு­சிஸ்­தான், ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீர் நிலங்­களை குத்­த­கைக்கு எடுத்து அங்கு பயிர்­களை சாகு­படி செய்­ய­வும் சீனா திட்­ட­மிட் டுள்­ளது. இதற்கு அந்­தப் பகுதி மக்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­மை­யும் குறிப்­பி­டத்­தக்­கது.

தவற விடாதீர்கள்:  ஜெருசலேம் விவகாரம் : பல நாடுகள் எதிர்ப்பு!

You might also like