முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வென்றது கிண்ணம்!

முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லர் கிண்­ணத்­துக்­காக நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் மாவட்டச் செயலக அணி கிண்­ணம் வென்­றது.

முல்­லைத்­தீவு முற்­ற­வெளி மைதா­னத்­தில் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் முல்­லைத்­தீவு மாவட்ட தபால் திணைக்­கள அணியை எதிர்த்து முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லக அணி மோதி­யது.

ஆரம்­பம் முதல் இரண்டு அணி­க­ளும் கடு மை­யா­கப் போரா­டிய போதி­லும் கோலெ­தை­யும் பதி­வு­செய்ய இய­ல­வில்லை. கோல் கணக்கு இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யி­லும் மாற்­றங்­கள் ஏற்­ப­ட­வில்லை.

சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. முடி­வில் முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லக அணி 4:1 என்ற கோல் வெற்­றி­பெற்­றது.

தவற விடாதீர்கள்:  டக்கெட் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

You might also like