இரண்டாவது ஆட்டத்தில் வென்றது ஆஸ்திரேலியா!

ஆஷஸ் தொட­ரின் இரண்­டா­வது ஆட்­டத்­தி­லும் வெற்­றி­பெற்று தொட­ரில் 2:0 என்று முன்­னிலை வகிக்­கி­றது ஆஸ்­தி­ரே­லிய அணி. பக­லி­ரவு டெஸ்ட் ஆட்­ட­மாக அடி­லெய்­டில் இந்த ஆட்­டம் நடை­பெற்­றது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற இங்­கி­லாந்து அணி முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது. இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆஸ்­தி­ரே­லிய அணி 8 இலக்­கு­களை இழந்து 442 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை நிறுத்­தி­யது.

அதி­க­பட்­ச­மாக ஷோன் மார்ஷ் 126 ஓட்­டங்­க­ளை­யும், பெய்ன் 57 ஓட்­டங் க­ளை­யும், கவாயா 53 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் ஓவர்­டன் 4 இலக்­கு­க­ளை­யும், புரோட் 2 இலக்­கு­க­ளை­யும், அன்­டர்­சன், வோக்ஸ் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய இங்­கி­லாந்து அணி 227 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அதி­க­பட்­ச­மாக ஓவர்­டன் 41 ஓட்­டங்­க­ளை­யும், குக் 37 ஓட்­டங்­க­ளை­யும், வோக்ஸ் 36 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில் லையன் 4 இலக்­கு­க­ளை­யும், ஸ்ராக் 3 இலக்­கு­க­ளை­யும், கம்­மின்ஸ் 2 இலக்­கு­க­ளை­யும், ஹசில்­வூட் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

215 ஓட்­டங்­கள் முன்­னி­லை­யு­டன் இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த ஆஸ்­தி­ரே­லிய அணி 138 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அதி­க­பட்­ச­மாக கவாயா 20 ஓட்­டங்­க­ளை­யும், ஸ்ராக் 20 ஓட்­டங்­க­ளை­யும், மார்ஷ் 19 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

தவற விடாதீர்கள்:  கால்பந்து உலகில் நானே சிறந்தவன்-ரொனால்டோ

பந்­து­வீச்­சில் அன்­டர்­சன் 5 இலக்­கு­க­ளை­யும், வோக்ஸ் 4 இலக்­கு­க­ளை­யும், ஓவர்­டன் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

இங்­கி­லாந்­துக்கு இலக்­காக 354 ஓட்­டங்­கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டது. நேற்­று­முன்­தி­ன­நாள் முடி­வில் இங்­கி­லாந்து அணி 4 இலக்­கு­களை இழந்து 176 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்­தது. ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் வெற்­றிக்கு மேல­தி­க­மாக 6 இலக்­கு­கள் தேவை.

இங்­கி­லாந்து அணி­யின் வெற்­றிக்கு கூடு­த­லாக 178 ஓட்­டங்­கள் தேவை என்ற நிலை­யில் ஆட்­டத்­தின் இறு­தி­நாள் ஆரம்­ப­மா­னது. இங்­கி­லாந்து அணி திடீர் சரி­வு­கண்டு 233 ஓட்­டங்­க­ளில் சுருண்­டதை அடுத்து 120 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது ஆஸ்­தி­ரே­லிய அணி.

முத­லா­வது ஆட்­டத்­தி­லும் ஆஸ்­தி­ரே­லி­யாவே வெற்­றி­பெற்­றி­ருந்­தது. இத­னால் எஞ்­சிய மூன்று ஆட்­டங்­க­ளி­லும் வெற்­றி­பெற்­றால் மட்­டுமே இங்­கி­லாந்­தால் கிண்­ணம் வெல்­ல­மு­டி­யும் என்ற நிலை தற்­போது தோற்­றம் பெற்­றுள்­ளது.

You might also like