இன்றைய மோதல்கள்

யங்ஸ்ரார் வி.கழக
கால்பந்தாட்டம்

வவுனியா வைரவப் புளியங்குளம்
யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் 23ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் கால்பந்தாட்டத்
தொடரின் ஆட்டங்கள் குறித்த விளை
யாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தொடரில் இன்று மாலை 6.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.

திருக்குமரன் வி.க.
கால்பந்துத் தொடர்

உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக் கழகம் நடத்தும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் குறித்த விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து உரும்பிராய் அண்ணா ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.

தவற விடாதீர்கள்:  சக்குரா கராத்தே கழகத்துக்கு தேசியமட்டத்தில் பதக்கங்கள்

You might also like