அணித்தெரிவு மீது தயாசிறி அதிருப்தி!

வானூர்தி நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர் வீரர்கள் இந்­தி­யா­வுக்கு எதி­ரான ஒரு­நாள் தொட­ருக்­காக இலங்கை அணி வீரர்­கள் புறப்­ப­டத் தயா­ரா­ன­போது, அவர்­க­ளின் பய­ணத்தை விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் தயா­சிறி நிறுத்தி வைத்­தார்.

அணித் தெரி­வில் அவ­ருக்கு உள்ள அதி­ருப்­தியை அடுத்தே வீரர்­க­ளின் பய­ணம் நிறுத்தி வைக்­கப் பட்­டது என்று தகவல்கள் வந் துள்ளன.

இலங்கை கிரிக்­கெட் அணி இந்­தி­யா­வில் சுற்­றுப்­ப­ய­ணம் செய்து டெஸ்ட் ஆட்­டங்­க­ளில் விளை­யாடி வரு­கி­றது. இந்­தத் தொடர் முடி­ வ­டைந்­த­தும் இரு அணி­க­ளும் 3 ஒரு­நாள் ஆட்­டங்­கள் கொண்ட தொட­ரில் மோத­வுள்­ளன.

ஒரு­நாள் தொட­ருக்­கான இலங்கை அணி­யில் அதி­ரடி மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. தலை­மைத்­து­வத்­தில் இருந்து தரங்க நீக்­கப் பட்­டி­ருந்­தார். இவர் தலை­மை­யி­லான இலங்கை அணி இந்த ஆண்­டில் தென்­னா­ பி­ரிக்கா, இந்­தியா, பாகிஸ்­தான் அணிக­ளுக்கு எதி­ரான தொட­ரில் தொடர்ச்­சி­யாக வெள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது.

தரங்­க­வின் நீக்­கத்­துக்கு இதுவே முக்­கிய கார­ணம். திசர பெரேரா தலை­வ­ராக்­கப்­பட்­டார். டெஸ்ட் ஆட்­டங்­க­ளின் தலை­வ­ரான சந்­தி­மல்­லுக்கு ஓய்வு கொடுக்­கப்­பட்­டது.

தவற விடாதீர்கள்:  விடைபெறுகிறார் கெவின் பீற்றர்சன்

இந்த அணி நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு கொழும்­பில் இருந்து வானூர்தி மூலம் இந்­தி­யா­வுக்கு புறப் ப­ட­வி­ருந்த வேளை இவர்­க­ளின் பய­ணத்தை விளை­யாட்­டுத் துறை அமைச்­சர் தயா­சிறி ஜய­சே­கரா நிறுத்தி வைக்க உத்­த­ர­விட்­டார்.

அறி­விக்­கப்­பட்­டுள்ள அணி­யில் இரண்டு மாற்­றங்­களை விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் எதிர்­பார்க்­கி­றார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like