தனஞ்சய அபாரம் ஆட்டம் சமநிலை!

இந்தியா – இலங்கை அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்­றா­வ­தும் இறு­தி­யா­ன­து­மான டெஸ்ட் ஆட்­டம் சம­நி­லை­யில் முடி­வ­டைந்­தது. இரண்­டா­வது ஆட்­டத்­தில் வெற்­றி­பெற்ற கார­ணத்­தால் 1:0 என்ற அடிப்­ப­டை­யில் இந்­திய அணி கிண்­ணம் வென்­றது.

டெல்­லி­யில் இந்த ஆட்­டம் நடை­ பெற்­றது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்று முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது இந்­திய அணி. அந்த அணி 7 இலக்­கு­களை இழந்து 536 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை ­நி­றுத்­து­வ­தாக அறி­வித்­தார் கோக்லி.

அதி­க­பட்­ச­மாக கோக்லி 243 ஓட்­டங்­க­ளை­யும், முரளி விஜய் 155 ஓட்­டங்­க­ளை­யும், ரோகித் சர்மா 65 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் சன்­ட­கன் 4 இலக்­கு­க­ளை­யும், கமகே 2 இலக்­கு­க­ளை­யும், டில்­ரு­வான் பெரேரா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய இலங்கை அணி 373 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அதி­க­பட்­ச­மாக சந்­தி­மல் 164 ஓட்­டங்­க­ளை­யும், மத்­தி­யூஸ் 111 ஓட்­டங்­க­ளை­யும், டில்­ரு­வான் பெரேரா 42 ஓட்­டங்­க­ளை­யும் குவித்­த­னர்.

பந்­து­வீச்­சில் இசாந் சர்மா, அஸ்­வின் இரு­வ­ரும் தலா 3 இலக்­கு­க­ளை­யும், சமி, ஜடேயா இரு­ வ­ரும் 2 இலக்­கு­க­ளை­யும் கைÃப் பற்­றி­னர்.

தவற விடாதீர்கள்:  கால்பந்து உலகில் நானே சிறந்தவன்-ரொனால்டோ

163 ஓட்­டங்­கள் முன்­னி­லை­யு ­டன் இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த இந்­திய அணி, 246 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது. அதி­க­பட்­ச­மாக தவான் 67 ஓட்­டங்­க­ளை­யும், ரோகித் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 50 ஓட்­டங்­க­ளை­யும், கோக்லி 50 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

இலங்­கைக்கு இலக்­காக 410 ஓட்­டங்­கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டது. நேற்­று­முன்­தின நான்­காம் நாள் முடி­வில் இலங்கை அணி 3 இலக்­கு­களை இழந்து 31 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்­தது. தனஞ்­சய டி சில்வா 13 ஓட்­டங்­க­ளு­ட­னும், மத்­தி­யூஸ் ஓட்­ட­ மெ­தை­யும் பெறாத நிலை­யிலும் இறுதி நாளுக்­காக நேற்­றுக் கள­மி­றங்­கி­னர்.

ஓர் ஓட்­டத்­து­டன் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­றி­னார் மத்­தி­யூஸ். எனி­னும் தனஞ்­சய சிறந்த ஆட்­டத்தை வெளிப்படுத்தி அரைச்­ச­தம் கடந்­தார். சந்­தி­மல் ஓர­ளவு தாக்­குப்­பி­டித்­தார். சதம் கடந்­தார் தனஞ்­சய. அவர் 119 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழப்­பற்ற ஓய்வை அறி­வித்­துச் சென்­றார்.

சில்வா, டிக்­வெல்ல இணைந்து நாள் முடி­வு­வரை தாக்­குப் பி­டிக்க தோல்­வி­யைத் தவிர்த்து ஆட்­டத்தை சமன்­செய்­தது இலங்கை அணி.
ஆட்­ட­நா­ய­க­னா­க­வும், தொட­ராட்ட நாய­க­னா­க­வும் இந்­திய அணி­யின் தலை­வர் கோக்லி தெரி­வா­னார்.

You might also like