ஓய்வு என்­பது தற்­போ­தில்லை -அன்­டர்­சன் கருத்து

அடி­லெய்­டில் நடை­பெற்ற ஆஷஸ் தொட­ரின் இரண்­டா­வது ஆட்­டத்­தின் இரண்­டா­வது இன்­னிங்­ஸில் 5 இலக்­கு­களை வீழ்த்­தி­ய­வ­ரான இங்­கி­லாந்து அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் அன்­டர்­சன் ‘‘ஓய்வு என்­பது தற்­போ­தில்லை’’ என்று தெரி­வித்­தார்.

‘‘நான் எப்­போ­தும் பந்­து­வீ­சு­வது போல்­தான் தற்­போ­தும் பந்­து­வீ­சிக் கொண்­டி­ருக்­கி­றேன் என்ற உணர்வு எனக்கு உள்­ளது. எனது உடல் அதற்கு ஏற்­ற­படி ஒத்­து­ழைக்­கி­றது. என்­னு­டைய ஓய்வு மற்­றும் கிரிக்­கெட் வாழ்க்கை முடி­வுக்கு வரு­வது குறித்து பேசு­கி­றார்­கள். என்­னால் இன்­னும் விளை­யாட முடி­யும் என்­பதை அவர் க­ளுக்குத் தெளி­வுப­டுத்த விரும்­பு­கி­றேன். இலக்­கு­கள் வீழ்த்­தக் கூ­டிய பந்­து­களை வீசும் திறமை என்­னி­டம் உள்­ளது. அடி­லெய்ட் டெஸ்­டில் இலக்­கு­களை வீழ்த்­தி­ ய­துபோல், தொடர்ந்து செயற்­பட முடி­யும் என்ற நம்­பிக்கை உள்­ளது. என்­னு­டைய எதிர்­கா­லம் பற்றி அதிக அள­வில் சிந்­திக்க நான் விரும்­ப­வில்லை. நான் கிரிக் கெட்டை அனு­ப­வித்து விளை­யாடி வரு­கின்­றேன்’’ என அன்­டர்­சன் மேலும் தெரி­வித்­தார்.

அன்­டர்­சன் இது­வரை 131 டெஸ்ட் ஆட்­டங்­க­ளில் விளை­யாடி 514 இலக்­கு­களை வீழ்த்­தி­யுள்­ளார். 35 வய­தா­கும் அவர் அதிக இலக்­கு­களை வீழ்த்­திய இங்­கி­லாந்து வீரர் என்ற சாத­னை படைத்துள்­ளார் என்­பது குறிப்­பி­டத்தக் கது.

தவற விடாதீர்கள்:  இன்டர் மிலன் -– ஜூவென்டாஸ் அணிகளின் ஆட்டம் சமநிலை

You might also like