அடுத்த ஐ.பி.எல். தொடரில் அணிக்கு 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி!

அடுத்த ஐ.பி.எல். தொட­ரில், ஒவ்­வொரு அணி­க­ளும் தலா 5 வீரர்­க­ளைத் தக்­க­வைக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு சூதாட்­டக் குற்­றச்­சாட்­டில் சென்னை, ராஜஸ்­தான் அணி­க­ளுக்கு இரண்டு ஆண்­டு­கள் தடை விதிக்­கப்­பட்­டது. தடை முடி­வ­டைந்து அடுத்த வரு­டம் இரண்டு அணி­க­ளும் மீண்­டும் கள­மி­றங்­கு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.

அணி­க­ளின் சம­ப­லத்­தைக் கருத்­திற் கொண்டு ஒவ்­வொரு அணி­க­ளும் எத்­தனை வீரர்­களைத் தக்­க­ வைக்­கும் என்­ப­தில் வெவ் வேறு கருத்­துக்­கள் நில­வின.

சில அணிக­ளின் உரி­மையா­ளர்­கள் அணிக்கு மூன்று பேரைத் தக்­க­வைக்க வேண்­டும் என்­றும், வேறு சில அணி­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் அணிக்கு ஐந்து பேரைத் தக்­க­வைக்க வேண்­டும் என்­றும் வாதிட்­ட­னர். அணிக்கு
5 வீரர்­களை தக்­க­வைக்கத் தற்­போது அனு­ மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

தவற விடாதீர்கள்:  இன்டர் மிலன் -– ஜூவென்டாஸ் அணிகளின் ஆட்டம் சமநிலை

You might also like