விசாரணைக் குழு பரிந்துரைத்தபடி அமைச்சர்கள் இருவரும் உடன் பதவி விலகார்

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் த.குரு­கு­ல­ராசா ஆகிய இரு­வ­ரும் பதவி வில­க­வேண்­டும் என்று, ஊழல் மோசடி தொடர்­பில் விசா­ரிக்க முத­ல­மைச்­சர் நிய­மித்த விசா­ர­ணைக் குழு பரிந்­து­ரைத்­த­போ­தும் அந்த இரு அமைச்­சர்­க­ளும் உட­ன­டி­யா­கப் பதவி வில­கும் எண்­ணத்­தில் இல்லை என்று வட­மா­காண சபை அர­சி­யல் வட்­டா­ரங்­கள் உத­யன் பத்­தி­ரி­கைக்­குத் தெரி­வித்­தன.

இத­னால் முத­ல­மைச்­ச­ருக்கு நெருக்­கடி அதி­க­மா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மாகாண விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் மீதும் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா மீதும் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக் களை விசா­ரணை செய்த முத­ல­மைச்­ச­ரின் குழு, அவர்­கள் இரு­வர் மீதான குற்­றச்­சாட் டுக்­கள் பல­வற்­றில் அவர்­க­ளைக் குற்­ற­வா­ளி­க­ளா­கக் கண்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டை­யில் அவர்­கள் பதவி வில­க­வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­தி­ருந்­தது.

அந்த அறிக்கை கடந்த சனிக்­கி­ழமை முத­ல­மைச்­ச­ரால் அமைச்­சர்­க­ளுக்கு அனுப்பி வைக்கப்­பட்­டது. அறிக்­கை­யில் இடம்­பெற்­றி­ருந்த முக்­கிய விட­யங்­கள் சில கசிந்த நிலை ­யில் உத­யன் அவற்றை நேற்று வெளி­யிட்­டது. இத­னை­ய­டுத்து முத­ல­மைச்­ச­ருக்கு நெருக்­கீ­டு­கள் வராத வகை­யில் அமைச்­சர்­கள் இரு­வ­ரும் உட­ன­டி­யா­கப் பதவி வில­கு­வார்­கள் என்ற எதிர்­பார்ப்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் இருந்­தது. ஆனால், அமைச்­சர்­கள் இரு­வ­ரும் உட­ன­டி­யா­கப் பதவி வில­கு­வ­தற்­கான சாத்­தி­யங்­களோ ஏற்­பா­டு­களோ தென்­ப­ட­வில்லை என்று மாகாண சபை அர­சி­யல் வட்­டா­ரங்­கள் உத­யன் பத்­தி­ரி­கைக்­குத் தெரி­வித்­தன.

அமைச்­சர்­க­ளின் இந்த நிலைப்­பாடு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு கடும் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தும் என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அமைச்சர்கள் இருவரும் பதவி விலகவேண்டும் என்று சரமாரியாகக் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவர்களைப் பதவியிலிருந்து முதலமைச்சர் நீக்கவேண்டும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

இத்தகையதொரு நிலையில் முதலமைச்சர் மீது அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் என்று அவதானிகள் கூறுகின்றனர்.

[yop_poll id=”1″]

You might also like