பிடுங்கப்பட்ட அதிகாரங்கள் மாகாணங்களுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும்!

மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள் மீளப்­பெ­றப்­பட்­டுள்­ளன. இது அர­ச­மைப்­புக்கு முர­ணா­னது. அந்த அதி­கா­ரங்­கள் மீள­வும் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டும். இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ண தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற குழு­நிலை விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தேசி­யப் ­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வொன்­றா ­கவே மாகா­ண­ச­பை­கள் ஆரம்­பத்­தில் உரு­வாக்­கப்­பட்­டன. அபி­வி­ருத்தி காணாத மாகா­ணங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான கரு­வி­யா­கவே முப்­பது வரு­டங்­க­ளின் பின்­னர் மாகா­ண­ச­பை­கள் தற்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

மாகா­ண ­ச­பை­கள் செயற்­றி­றன் மிக்­க­தாக இருக்­க­வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் முப்­பது ஆண்டு அனு­ப­வத்­தின் பின்­னர் இன்­று­தென் பகு­தி­யி­லுள்ள மாகா­ண­ச­பை­க­ளின் முத­ல­மைச்­சர்க­ளும் எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளும் இருக்­கின்­ற­னர்.மாகா­ண­ச­பை­கள் அமைச்­சி­னால் செய்­யக்­கூ­டிய பல்­வே­று­வி­ட­யங்­கள் காணப்­ப­டு­கின்­றன.

1987 ஆம் ஆண்­டு­தொ­டக்­கம் இன்­று­வரை ஆட்­சி­யி­லி­ருந்த அனைத்து அர­சு­க­ளி­னா­லும் அமைச்­சி­னால் அந்த வேலை­கள் நிறை­வேற்­றப் பட்டி­ருக்­க­வில்லை. மாகா­ண­ச­பை­கள் அமைச்சு பார்த்­துக் கொண்­டி­ருக்­கும் போதே சகல ஆட்­சி­யின் போதும் 13 ஆவது அர­ச­மைப்­புத் திருத்­தத்­தின் அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளி­டம் இருந்­து­மீ­ளப் பெறு­வ­தற்கு கொழும்பு அர­சு­கள் சகல வழி­க­ளி­லும் முயற்­சித் திருக்­கின்­றன.

தவற விடாதீர்கள்:  கூட்­ட­மைப்­பின் பட்­டி­ய­லில் முஸ்­லிம்­க­ள் ஐம்பது பேர்!!

மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்­கள் அர­ச­மைப்­புக்கு முர­ணா­ன­வ­கை­ யில் மீள­பெ­றப்­பட்ட பல்­வேறு சட்­டங்­கள் இருக்­கின்­றன.

இந்­த­வி­ட­யங்­க­ளில் திருத்­தம் செய்து அந்த அதி­கா­ரங்­களை மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளில் மாகா­ண­ச­பை­கள் அமைச்சு தலை­யீடு செய்­ய­வேண்­டும். மாகா­ணங்­க­ளி­லுள்ள அர­ச­சேவை ஆணைக்­கு­ழுக்­களை சுயா­தீ­ன­ மாக்­கு­வது மாகா­ண­ச­பை­கள் சட்­டத்துக்கான அத்­தி­யா­வ­சிய திருத்­த­மாக இருக்­கி­றது.

தற்­போது மாகா­ணங்களில் அர­ச­சேவை ஆணைக் குழுக்­கள் சுயா­தீ­ன­மாக இல்லை. மாகாண அர­ச­சேவை ஆணைக்­கு­ழுக்­கள் அனைத்­தும் மாகாண ஆளு­நர்­க­ளின் கீழேயே இருக்­கின்­றன. இதில் அரச தலை­வ­ருக்கே இல்­லாத அதி­கா­ரம் ஆளு­ந­ருக்கு இருக்­கி­றது. தேசிய அர­ச­சேவை ஆணைக்­கு­ழு­வின் தீர்மா­னத்தை அரச தலை­வ­ரி­னால் மாற்­ற­மு­டி­யாது.

எனி­னும், ஆணைக்­கு­ழு­வின் தீர்­மா­னத்­தை­மீ­றிச் செயற்­ப­டு­வ­தற்கு மாகா­ணத்­தில் ஆளு­ந­ருக்கு அதி­கா­ரம் இருக்­கி­றது. சுயா­தீன அர­ச­சேவை ஆணைக்­கு­ழுக்­களை நிறுவ வேண்­டும் என்­பதே மாகாண முத­ல­மைச்­சர்­க­ளின் வேண்­டு­கோ­ளாக இருக்­கி­றது. அந்­த­க் கோ­ரிக்­கையை நிறை­வேற்­று­மாறு அமைச்­ச­ரி­டம் வேண்­டு­கோள் விடுக்­கி­றேன் – -என்­றார்.

You might also like