ஐ.தே.கவின் ஆச­னப் பங்­கீ­டும் இழு­ப­றி­யில்!

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின்­கீழ் போட்­டி­யி­ட­வுள்ள பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்­கும், ஐ.தே.கவுக்­கு­மி­டை­யில் ஆச­னப்­பங்­கீடு தொடர்­பில் நேற்று நடை­பெற்ற பேச்­சும் இழு­பறி நிலை­யி­லேயே முடி­வ­டைந்தது.

குட்­டித் தேர்­த­லில் யானைச் சின்­னத்­தின் கீழ்க் கூட்­டணி அமைத்­துப் போட்­டி­யி­ட­வுள்ள தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், ஜாதிக ஹெல உறு­மய உள்­ளிட்ட கட்­சி­க­ளின் பிர­மு­கர்­கள் கடந்­த­ வா­ரம் முதலே ஐ.தே.கட்­சி­யின் முக்­கி­யஸ்­தர் க­ளு­டன் தொடர் சந்­திப்­பு­களை நடத்­தி­வந்­த­னர்.

இந்த நிலை­யில் நேற்­றைய தின­மும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தலை­மை­யி­லான ஐ.தே.க. உறுப்­பி­னர்­க­ளுக்­கும், தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் பிர­தி­நி­தி­ க­ளுக்­கு­மி­டை­யி­லான பேச்சு நடை­பெற்­றது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்­தில் போட்­டி­யி­டு­வ­தற்­காக தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு ஐ.தே.க. வழங்­கி­யுள்ள இட ஒதுக்­கீடு திருப்­தி­க­ர­ மாக அமைந்­துள்ளபோதி­லும் கொழும்பு, பதுளை, கண்டி உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளி­லான ஒதுக்­கீடு திருப்­தி­ய­ளிக்­கும் வகை­யில் அமை­ய­வில்லை.

எனவே, மேற்­படி மாவட்­டங்­க­ளில் தனித்­துக் கள­மி­றங்­கு­வதா அல்­லது கூட்­ட­ணி­யா­கப் பய­ணிப்­பதா என்­பது குறித்து முற்­போக்குக் கூட்­ட­ணிக் குள் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.

தவற விடாதீர்கள்:  தேர்தலில் பெண்­க­ளின் வகி­பங்கு- ஆராய கேரளா செல்­கி­றது அதிகாரிகள் குழு!!

இத­ன­டிப்­ப­டை­யில் பதுளை, இரத்­தி­ன­புரி ஆகிய மாவட்­டங்­க­ளி­லும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் கீழ் தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி போட்­டி­யி­டக்­கூ­டும் என்­றும், கொழும்பு, கண்டி ஆகிய மாவட்­டங்­க­ளில் தனித்துச் செல்­வது பற்றி ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது என்­றும் அறி­ய­மு­டி­கின்­றது.

எனி­னும், சகல தொகு­தி­க­ளி­லும் யானை சின்­னத்­தின் கீழேயே போட்­டி­யிடவேண்­டும் என்­ப­தில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் தலை­மைக் கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக்­கட்சி உறு­தி­யாக இருப்­ப­தால் இனி­வ­ரும் நாள்­க­ளில் முடி­வு­கள் மாறக்­கூ­டிய சாத்­தி­ய­மும் இல்­லா­மல் இல்லை என அர­சி­யல் விமர்­ச­கர் ஒரு­வர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இதே­போல் முஸ்­லிம் காங்­கி­ர­ஸும் ஆசன ஒதுக்­கீடு தொடர்­பில் இன்­னும் இறுதி முடிவை எட்­ட­வில்லை. நேற்­றைய தினம் நடை­பெற்ற பேச்­சு­க­ளில் இறுதிச் சுற்றுப் பேச்­சு­க­ளாக அமை­யு­மென எதிர்­பார்க்­கப்­பட்­ட­போ­தி­லும் அவை அனைத்­தும் இழு­பறி நிலை­யி­லேயே முடி­வ­டைந்­துள்­ளன. கொழும்பு அர­சி­யல் களத்­தில் இன்­றைய தின­மும் முக்­கிய சந்­திப்­பு­கள் தொட­ர­வுள்­ளன.

அதே­வேளை, ஐ.தே.கவு­ட­னான இன்­றைய பேச்­சு­க்க­ளில் உடன்­பாடு எட்­டப்­ப­டும் பட்சத்­தில், கூட்­ட­ணிக் கட்­சி­கள் இன்­றைய தினம் மாலைக்­குள் சில இடங்­க­ளில் வேட்­பு­ம­னுக்­களைத் தாக்­கல் செய்­யும் பணி­களை ஆரம்­பிக்­கும் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

You might also like