மைத்­திரி – மகிந்த அணி­க­ளின் இணைப்­புக்கு முட்­டுக்­கட்டை யார்?

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஒன்­றி­ணை­ய­வேண்­டும் என்­ப­தையே முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும் விரும்­பு­கி­றார். எனவே, கூட்டு எதி­ர­ணி­யின் பின்­பு­லத்­தி­லுள்ள இரு­வரே இணைப்பைத் தடுத்து வரு­கின்­ற­னர் என்று அமைச்­சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­தார்.

அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் வாராந்த செய்­தி­ யா­ளர் சந்­திப்பு நேற்று முற்­ப­கல் அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நடை­பெற்­றது. இதன்­போது கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­த­லில் இணைந்து போட்­டி­யிட வரு­மாறு கூட்டு எதி­ர­ணிக்­கும் சுதந்­தி­ரக் கட்சி அழைப்பு விடுத்­துள் ளது. தனித்­துக் கள­மி­றங்­க­வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் கூட்டு எதி­ரணி இருப்­பது தவ­றான செய­லா­கும்.

கூட்டு எதி­ரணி பக்­க­முள்ள பல­ரும் சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யி­டு ­வ­தையே விரும்­பு­கின்­ற­னர். குறிப்­பாக, ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யா­கக் கள­மி­றங்க தினேஸ் குண­வர்­தன ஆத­ரவு தெரி­வித்­துள்­ளார்.

அத்­து­டன், சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ ணி­யின் கூட்­டத்­தில் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில ஆகி­யோர் பங்­கேற்­க­வில்லை. கூட்­ட­ணி­யி­லி­ருந்து அவர்­கள் வில­கிச்­செல்­கின்­ற­னர் என்­ப­தையே இது எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

தவற விடாதீர்கள்:  ஓய்வு பெற்ற ஊழியர்களை பணிக்கு அழைக்கிறது ரயில்வே திணைக்களம்

எனி­னும், இரு­வர் மாத்­தி­ரமே இணைப்­புக்குத் தடை­யாக இருந்­து­வ­ரு­கின்­ற­னர். மகிந்த, பசில் ஆகி­யோர் அவ்­வி­ரு­வ­ரும் இல்லை என்­ப­தை­யும் கூறி­யா­க­ வேண்டும். தடை­யாக இருக் கும் அந்த இரண்டு பேரும் விரை­வில் பிர­திபலனை அனு­ப­விக்க நேரி­டும். சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ராக எதிர்­கா­லத்­தில் வரக்­கூ­டும் என்ற கன­வி­லும் அவர்­கள் இருக்­கின்­ற­னர் -– என்­றார்.

You might also like