குடா­நாட்­டில் உரு­ளைக்­கி­ழங்­கு செய்கை ஆரம்­பம்

யாழ் குடா­நாட்­டில் உரு­ளைக்­கி­ழங்கு செய்­கையை விவ­சா­யி­கள் ஆரம்­பிக்­க­வுள்­ள­னர்.

அனே­க­மான இடங்­க­ளில் விவ­சா­யி­கள் இந்தச் செய்­கை­யில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­ற­னர். குறிப்பாக ஊரெழு, உரும்­பி­ராய், கோப்­பாய் போன்ற இடங்­க­ளில் செய்­கை­யா­ளர்­கள் கிழங்­கு­களை நடுகை செய்து வரு­கின்­ற­னர்.

தற்­போது கால­நிலை சீர­டைந்­த­தை அடுத்து நடுகை செய்­வ­தில் மும்முர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இதே சம­யம் மாவட்ட உரு­ளைக்­கி­ழங்கு உற்­பத்­தி­யா­ளர் விற்­பனை கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் சமா­சம் விதை கிழங்­கு­களை தரு­வித்­துள்­ளது. ஏற்­க­னவே 3 ஆயிரம் அந்­தர் வரை­யி­லான விதை உரு­ளைக்­கி­ழங்­கு­கள் எடுத்து வரப்­பட்­டுள்­ளன.

மொத்­த­மாக 5 ஆயிரம் அந்­தர் வரை­யி­லான கிழங்­கு­கள் எடுத்து வரப்­ப­டும் என்று சமா­சத் தலை­வர் இ.தெய்­வேந்­தி­ரன் தெரி­வித்­தார். இந்த விதைக் கிழங்­கு­கள் ஐம்­பது வீத மானிய விலை­யில் செய்­கை­யா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

விதை கிழங்­கு­க­ளுக்கு விண்­ணப்­பித்த செய்­கை­யா­ளர்­கள் சமா­சத்­து­டன் தொடர்பு கொண்டு பெறுமா­றும் கேட்­கப்­பட்­டுள்­ளது.

தவற விடாதீர்கள்:  பணிப்புறக்கணிப்பை புறக்கணித்து யாழ் நோக்கி வந்த தொடருந்து

You might also like