வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் வெள்ளம்!

மக்­க­ளின் கோரிக்­கை­யைத் தொடர்ந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் நிதி ஒதுக்­கீட்­டின் கீழ் பல இலட்­சம் ரூபா செல­வில் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்ட வட­லி­ய­டைப்பு பிள்­ளை­யார் கோவில் 1ஆம் வீதி உரிய முறை­யில் சீர­மைக்­கப்­ப­டா­ மை­யி­னால் மழை வெள்­ளம் வீதி­யில் தேங்கி நிற்­கின்­றது என மக்­கள் தெரிவிக்கின்றனர்.

வலி. தென் மேற்கு பிர­தே­சத்­தில் பண்­டத்­த­ரிப்பில் உள்ள வட­லி­ய­டைப்பு பிள்­ளை­யார் கோவில் 1ஆம் வீதி பல வரு­டங்­க­ளாக சீர­மைக்­கப்­ப­டாது காணப்­பட்ட நிலை­யில் மழை காலங்­க­ளில் மக்­கள் பய­ணம் செய்ய முடி­யாது சிர­மங்­களை எதிர்­நோக்­கி­னர்.

இந்­த­நிலை குறித்து யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வ­னின் கவ­னத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­திய அந்­தப் பகுதி மக்­கள் வீதியை சீர­மைத்து தரு­மா­றும் கோரி­யி­ருந்­த­னர்.

கோரிக்­கையை அடுத்து பல லட்­சம் ரூபா செல­வில் மேற்­படி வீதி, வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையால் சீர­மைக்­கப்­பட்­டது.
எனி­னும் உரிய முறை­யில் உய­ர­மாக அமைக்­கப்­ப­டா­மை­யால் மழை வெள்­ளம் மீண்­டும் வீதி­யில் தேங்கி நிற்­கின்­றது.

இதே­வேளை 3 மாதங்­க­ளுக்கு முன் சீர­மைக்­கப்­பட்ட வீதிக்கு இது­வரை இரண்­டா­வது தட­வை­யாக தார் ஊற்­றா­மை­யால் வீதி இடை­யி­டையே சேதத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளது.

தவற விடாதீர்கள்:  யாழ்ப்­பா­ணத்­தில் 2ஆவது சுயேச்சை களத்தில்!

You might also like