வவு­னியா நக­ர­ச­பை செய­ல­ருக்குத் திட்­டு; கைதானவருக்குப் பிணை­!

வவு­னியா நக­ர­ச­பைச் செய­ல­ரைப் பற்றி அவ­தூறு பரப்­பி­ய­வர் நீதி­மன்ற பிணை­யில் விடு­விக்கப்பட்டார். வவு­னி­யா­வில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு மன்­னார் வீதி வேப்­பங்­கு­ளம் பகு­தி­யில் கட்­ட­டப் பொருள்கள் விற்­பனை நிலை­யத்­தில் ஏற்­பட்ட தீப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­த­வில்லை என்று நக­ர­ச­பைச் செய­லரை அவ­தூறு பரப்­பிய நபர் ஒரு­வ­ருக்கு எதி­ராக நேற்று வவு­னியா பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டது.

நேற்­று­மாலை குறித்த நப­ரைக் கைது செய்து நீத­வான் நீதி­மன்­றில் பொலி­ஸார் முற்­ப­டுத்­தி­னர். அவ­ரைப் பிணை­யில் செல்ல நீதி­வான் அனு­ம­தி­ய­ளித்­துள்­ளார்.

நக­ர­ச­பை­யின் செயற்­பா­டு­கள் கார­ண­மா­கவே தீப் பர­வல் அதி­க­ரித்­தது என அந்த நபர் நகரசபைச் செயலரைச் சாடியிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

தவற விடாதீர்கள்:  நெளுக்குளத்தில் கஞ்சா விற்பனை; தகவல் வழங்குமாறு கோரிக்கை!!

You might also like