கூட்­டாட்சி அர­சின் பிறந்­த­நாள் கொண்­டா­டு­வதே கேள்­விக்­குறி?

கூட்­டாட்சி அரசு தனது 3ஆவது பிறந்த நாளைக் கொண்­டா­டு­வதே கேள்­விக் குறி­யா­கி­யுள்­ளது என வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­ லிங்­கம் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் 111ஆவது அமர்வு நேற்­று ­முன்­தி­னம் இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் வடக்கு மாகா­ணத்­தில் இயங்கி வரும் கைத்­தொ­ழில் பேட்­டை­கள் மற்­றும் உப்­ப­ளங்­களை அர­சி­த­ழில் (வர்த்­த­மானி) வெளி­யி­டு­தல் தொடர்­பாக வடக்கு மாகாண சபை­யின் கருத்­தைத் தெரி­விக்­கு­மாறு கேட்டு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறிக்கை ஒன்­றைச் சபை­யில் கொண்­டு­வந்­தார்.

இந்த விவா­தத்­தில் உரை­யாற்­றிய உறுப்­பி­னர் சிவா­ஜி­லிங்­கம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அர­சின் சில தந்­தி­ர­மான செயற்­பா­டு­களை நாம் அவ­தா­ன­மா­கக் கையா­ள­வேண்­டும். தெற்­கில் உள்ள மத்­தள விமான நிலை­யத்தை இந்­திய அர­சுக்கு விற்க முடி­யும் என்­றால் ஏன் எமது மாகா­ணத்­தில் உள்ள பலாலி விமான நிலை­யத்தை வெளி­நா­டு­க­ளுக்கு விற்க முடி­யாது?

பலாலி விமான நிலை­யத்தை வெளி­நா­டு­க­ளுக்கு குத்­த­கைக்கு கொடுப்­ப­தன் ஊடாக சிறப்­பான விமான சேவை­களை வழங்க முடி­யும். அதே­போல காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வது தொடர்­பி­லும் பல­த­ட­வை­கள் கதைத்­துள்­ளோம். இருந்­த­போ­தும் இன்­று­வரை எது­வும் நடக்­க­வில்லை. இப்­ப­டியே கதைத்­துக் கொண்­டி­ருப்­ப­தில் பயன் ஏதும் இல்­லை-­-–என்­றார்.

தவற விடாதீர்கள்:  தாய்வீடு சென்ற மகனை - வெட்­டிய தந்தை!

அதற்கு, இந்த விட­யத்­தில் பல மயக்க நிலை இருப்­ப­தால் நாம் நன்கு ஆராய்ந்த பின்­னர் தீர்க்­க­மான முடி­வை எடுப்­போம் என முத­ல­மைச்­சர் கோரிக்கை விடுத்­தார். அதன்­படி அவைத்­த­லை­வர் இந்த விட­யத்தை அடுத்த அமர்­வுக்கு ஒத்தி வைத்­தார்.

You might also like