குருநகர் மீனவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இறால் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. குருநகரைச் சேர்ந்த எமிலி யான் சியான் (வயது –39) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்த வராவர். நெஞ்சுவலி காரணமாகவே அவர் உயிரிழந்தார் என திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் தெரிவித்தார்.

குருநகர் கடலில் இருந்து சுமார் 6 கிலோமீற்றர் பகுதியில் படகில் இறால் பிடித்துக்கொண்டிருந்த வேளை அவர் சரிந்துள்ளார்.

படகில் இருந்த மற்றைய தொழிலாளி உடனடியாகப் படகைக் கரைக்குக் கொண்டு வந்து அதிலிருந்து அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளர்.

இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.

தவற விடாதீர்கள்:  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்- ஆசனப் பங்கீட்டு விவரம்!!

You might also like