முல்­லைத்­தீவு – இரட்­டை­வாய்க்­கால் வீதியைச் சீர­மைக்க மக்­கள் கோரிக்கை

முல்­லைத்­தீவு – இரட்­டை­வாய்க்­கால் சந்தி முதல் புது­மாத்­த­ளன் ஊடா­கச் செல்­லும் 13 கிலா­மீற்­றர் நீள­மான முதன்மை வீதி சீர­மைக்­கப்­ப­டா­மை­யால் மக்­கள் பெரும் பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கி­யுள்­ள­னர்.

பரந்­தன் ஏ- 35 வீதி­யின் இரட்­டை­வாய்க்­கால் சந்­தி­யி­லி­ருந்து வலை­ஞர் மடம், அம்­ப­ல­வன் பொக்­கணை, இடைக்­காடு, புது­மாத்­த­ளன், பழை­ய­மாத்­த­ளன் வரை செல்­கின்ற இந்த வீதி சீர­மைக்­கப்­ப­டா­மை­யால் சுமார் 1000 குடும்­பங்­க­ளுக்கு மேற்­பட்ட மக்­கள் அன்­றா­டம் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­ற­னர் என தெரி­விக்­கப்­பட்­டது.

மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட நிதி­யின் கீழ் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் நிதி­யொ­துக் கீட்­டில் வீதி­யின் இடைக்­கா­டுப் பகு­தி­யில் ஒரு கிலோ­மீற்­றர் வரை­யான வீதி மாத்­தி­ரம் சீர­மைக்­கப் பட்­டுள்­ளது. தவிர ஏனைய 12 கிலோ­மீற்­றர் வீதி சீர­மைக்­கப்­ப ­டாத நிலை­யில் உள்­ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு இந்­தப் பகு­தி­கள் மீள்­கு­டி­ய­மர்­வுக்கு அனு­ம­திக்­கப்­பட்­டன. அன்­றி­லி­ருந்து கடந்த நான்கு வரு­டங்­க­ளாக இந்த வீதி­யின் முக்­கி­யத்துவத்தை கருதி சீர­மைத்­துத்­த­ரு­மாறு இந்த பிர­தேச மக்­கள் கோரி வரு­கின்­ற­னர்.

தவற விடாதீர்கள்:  23 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது!

குறித்த கிரா­மங்­க­ளுக்­கான முதன்மை வீதி­யா­கக் காணப்­ப­டும் மேற்­படி வீதி உள்­ளிட்ட பச்­சைப்­புல் மோட்­டை­யில் இருந்து ஆனந்­த­பு­ரம் செல்­லும் வீதி வலை­ஞர் மடத்­தி­லி­ருந்து மந்­து­வில் செல்­லும் வீதி என ஏனைய குடி­யி­ருப்பு வீதி­க­ளும் இது­வரை செப்­ப­னி­டப்­ப­டாத நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன.

எனவே குறித்த வீதி­கள் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் கவ­ன­மெ­டுத்து முதன்மை வீதி முதல் ஏனைய குடி­யி­ருப்பு வீதி­கள் அனைத்­தை­யும் சீர­மைத்துத் தரு­மாறு பகுதி மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

You might also like