பால் கறக்­கும் இயந்­தி­ரங்­கள் வழங்கி வைப்பு

முல்­லைத்­தீவு, முத்­தை­ யன்­கட்டு கிராம கால் நடைப் பண்­ணை­யா­ளர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் முக­மா­க­வும் அவர்­க­ளின் தொழில் முயற்­சியை விருத்­தி­செய்­யும் முக­மா­க­ வும் வேள்ட் விஷன் நிறு­வ­னத்­தி­ன­ரால் 5 பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு தலா ஒரு இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யான பால் கறக்­கும் இயந்­தி­ரங்­கள் வழங்கி வைக்­கப்­பட்­டன.

முத்­தை­யன்­கட்டு கிராம அலு­வ­ல­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் பிற்­ப­கல் இடம்­பெற்ற நிகழ்­வில் ஒட்­டு­சுட்­டான் பிர­தேச கால் நடை வைத்­திய அதி­காரி, வேள்ட் விஷன் நிறு­வன இணைப்பு அதி­காரி, கிராம உத்­தி­யோ­கத்­தர், சமுர்த்தி அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­கள் ஆகி­யோர் கலந்­து­கொண்டு பய­னா­ளி­க­ளுக்கு இயந்­தி­ரங்­களை வழங்கி வைத்­த­னர்.

இந்த நிறு­வ­னத்­தி­ன­ரால் ஏற்­க­னவே அண்­மை­யில் இரண்டு பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு பால் கறக்­கும் இயந்­தி­ரங்­கள் வழங்கி வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­ டத்­தக்­கது.

தவற விடாதீர்கள்:  சிறு­வர் கதை நூல்வெளி­யீட்டு விழா!

You might also like