தமி­ழ­ருக்கு அதி­கா­ரங்களை வழங்க விரும்­பா­த­வர்­களே மாகாண பொலிஸ் அதி­கா­ரத்தை எதிர்க்­கின்­ற­னர்

மாகா­ணங்­க­ளுக்­கான பொலிஸ் அதி­கா­ரத்தை எதிர்த்து நிற்­போர் தமிழ் மக்­க­ளுக்கு நிர்­வாக அதி­கா­ரம் கூட வழங்­கப்­ப­டக்­கூ­டாது எனச் சிந்­திப்­ப­வர்­களே என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரட்­ணம் தெரி­வித்­தார்.

வட மாகா­ணம் உள்­ளிட்ட சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரம் வழங்க வேண்­டாம் என முன்­னாள் பொலிஸ் பிர­தா­னி­கள் சங்­கம் தங்­க­ளது ஆண்­டுப் பொதுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யுள்ளது. இதனை கோரிக்­கை­யாக அர­சாங்­கத்­துக்­கும் அனுப்­பி­யுள்­ளது.

இவ்­வா­றாக தென்­னி­லங்­கை­யில் இருந்து வெளிக்­கி­ளம்­பும் கருத்­துக்­கள் அதி­கா­ரப்­ப­கிர்­வில் நில­வும் மோச­மான எண்­ணங்­க­ளையே காட்­டு­கின்­றன.
பொலிஸ் அதி­கா­ரம் அர­ச மைப்­பின் 13ஆவது திருத்­தத்­தில் உள்­ளது. அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வற்கு தடை­கள் உள்­ளன.

பொலிஸ் அதி­கா­ரம் வடக்­குக்கு வழங்­கப்­பட்­டால் அது தனி­நாட்டு அந்­தஸ்­துக்கு உரித்­தா­ன­தாக அமைந்­து­வி­டும் என்ற விளக்­க­மற்ற சிந்­தனை தென்­னி­லங்கை மட்­டத்­தி­லும் ஏன் அர­சி­ய­லில் உள்ள சிங்­க­ளத் தலை­வர்­கள் பல­ரி­டத்­தி­லும் உள்­ளது.

பொலிஸ் அதி­கா­ரம் என்­பது நிர்­வாக ரீதி­யி­லான ஓர் விட­ய­மா­கும். மாகாண மட்­டத்­தில் சட்­டம் ஒழுங்கை நிலை­நி­றுத்­து­வ­தற்கு மாகாண மட்­டத்­தில் பொலிஸ் அதி­கா­ரம் பகி­ரப்­ப­டு­வது கட்­டா­ய­மா­ன­தா­கும். பொலிஸ் அதி­கா­ரம் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்று கோரும் முன்­னாள் பொலிஸ் பிர­தா­னி­கள் சங்­கம், ‘மாகாண மட்­டத்­தில் பொலிஸ் அதி­கா­ரம் பகி­ரப்­ப­டு­வ­தால் அவ­சர (119) பொலிஸ் சேவை­யைப் பெற முடி­யாது போகும்.

தவற விடாதீர்கள்:  தமிழ் அர­சுக் கட்­சிக்­குள் பங்­கீடு குறித்து அதி­ருப்தி

பொலிஸ் திணைக்­களப் புல­னாய்வுப் பிரிவு மாகாண மட்­டத்­தில் துண்­டா­டு­வ­தாக அமைந்­து­வி­டும்’ என சிறு­பிள்­ளைத்­த­ ன­மாக யதார்த்­தத்துக்குப் பொருந்­தாத வியாக்­கி­யா­ னங்­களை முன்­வைக்­கின்­றது.

பொலிஸ் அதி­கா­ரம் பொது மக்­கள் ஒழுங்­கு­டன் சம்­பந்­தப்­பட்­டது. தேசிய பாது­காப்­பு­டன் இரா­ணு­வமே சம்­பந்­தப்­பட்­டது. உண்­மை­யில் தேசிய பாது­காப்பு விட­யங்­கள் எது­வும் மாகாண பொலிஸ் அதி­கா­ரத்­துக்­குள் இல்லை. சட்­டத்­தின் பிர­கா­ரம் மாகாண பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­கள் கூட மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டவை ஆகும்.

இப்­ப­டி­யி­ருக்­கும்­போது தமிழ் மக்­க­ளுக்கு குறைந்­த­ள­ வான அதி­கா­ரங்­கள் கூட செல்­லக் கூடாது என்­ப­தற்­கா­கவா வடக்­குக்கு பொலிஸ் அதி­கா­ரம் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என விவா­திக்­கின்­ற­ னர் ? மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­கின்ற போது நிர்­வாக விட­யங்­களை திறன்­பட ஆற்ற முடி­யும்–என்­றார்.

You might also like