விவ­சாய நவீ­ன­ம­ய­மாக்­கல் செயற்றிட்­டத்­துக்கு ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் உத்­தி­யோ­கத்­தர்­கள்

வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சின் விவ­சாய நவீ­ன­ம­ய­மாக்­கல் செயற்றிட்­டத்­துக்கு முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்­கள் மற்­றும் அலு­வ­லக உத­வி­யா­ளர்­களை ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் நிய­மிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக மாகாண விவ­சாய அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
வடக்கு மாகா­ணத்­தில் அடுத்த ஆண்டு விவ­சாய நவீ­ன­ம­ய­மாக்­கல் என்­னும் சிறப்பு வேலைத்­திட்­டம் உலக வங்­கி­யின் உத­வி­யு­டன் முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வுள்­ளது. விவ­சா­யம் சார்ந்த உற்­பத்­தி­கள், பயிற்­சி­நெ­றி­கள், அறு­வ­டை­கள் தொடர்­பான பயன்­த­ரக்­கூ­டிய வேலைத் திட்­டங்­களை முன்­னெ டுக்­கும் ஒரு செயற்றிட்­ட­மா­கும்.

இந்தச் செயற்றிட்­டத்தை சிறப்­பாக மேற்­கொள்­வ­தற்கு பிரதித் திட்­ட­மி­டல் பணிப்­பா­ளர் அலு­வ­ல­கத்­தில் தனி­யான அலகு ஒன்று அமைத்து அதனை நிர்­வா­கம் செய்­வ­தற்கு முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்­கள் மற்­றும் அலு­வ­லக உத­வி­யா­ளர்­கள் தேவை.

ஆகவே இந்த உத்­தி­யோ­கத்­தர்­களை செயற்றிட்ட கால எல்­லைக்கு ஏற்ப ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பெறு­வ­தற்கு தற்­போது விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தவற விடாதீர்கள்:  தாய்வீடு சென்ற மகனை - வெட்­டிய தந்தை!

You might also like