தொலைக்­காட்சி, அலை­பேசி என்ற இரு சாத்­தான்­களையும் வீடு­க­ளில் ஒழிக்­க ­வேண்­டும்!

மாண­வர்­க­ளிடத்தில் வாசிப்­புப் பழக்­கத்தை அதி­க­ரிக்க வேண்­டும் என்­றால் ஒவ்­வொரு வீடு­ க­ளி­லும் உள்ள இரண்டு சாத்­தான்­களை ஒழிக்க வேண்­டும். ஒன்று தொலைக்­காட்சி மற்­றை­யது அலை­பேசி என வவு­னியா தேசி­யக்­கல்­வி­யி­யற் கல்­லூ­ரி­யின் முன்­னாள் பீடா­தி­பதி கு. சிதம்­ப­ர­நா­தன் தெரி­வித்­தார்.

தேசிய வாசிப்பு மாதத்­தில் நடத்­தப்­பட்ட போட்­டி­யில் வெற்றி பெற்ற மாண­வர்­க­ளுக்­கான பரி­சி­ளிப்பு நிகழ்வு நேற்று வவு­னியா கலா­சார மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்ததா­வது:

எதை எப்­படி வாசிக்க வேண்­டும் என்று புத்­த­கத்­தில் உள்­ளது. அவற்றைத் திருப்பித் திருப்பி வாசிக்க வேண்­டும். விளங்கி வாசிப்­பது ஞாப­கத்­தை­யும் மன­னத்­தை­யும் அதி­க­ரிக்­கும். இன்­றைய பிள்­ளை­க­ளின் ஞாப­கம் இன்­மைக்­குக் கார­ணம் வாசிப்­புத் திறன்­கு­றை­வாக இருப்­பதே. உரத்து வாசிக்­கும் போது வேறு சிந்­த­னை­கள் வராது. இது எனது அனு­ப­வத்­தில் நான் கண்ட உண்மை.

பிள்­ளை­கள் வீட்­டில் உரத்து வாசிக்க வேண்­டும். முன்­னர் உரத்து வாசிப்பு என்று பாடம் இருந்­தது. தற்­போது ஆசி­ரி­யர் உரத்து வாசிக்­கச் சொல்­வ­தில்லை. உரத்து வாசிக்­கும்­போது முதற்­த­ட­வை­யி­லேயே சரி­யான கிர­கிப்பு ஆற்­ற­லைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். பெரிய பெரிய சித்­தாந் தங்களை எல்­லாம் சொல்­லிக்­கொ­டுப்­ப­தற்கு வாசிப்பு முறை­கள் இருக்­கின்­றன.

தவற விடாதீர்கள்:  யாழிலிருந்து விரை­வில் விடை­பெ­று­வேன்- இளஞ்­செ­ழி­யன்

நாங்­கள் அதைப்­பின்­பற்­று­வ­தில்லை. எதனையும் இர­சித்­துப்­ப­டிக்க வேண்­டும். படிக்­கும்­போது ஒரு சந்­தோ­சம் வர­வேண்­டும். நயப்­பு­ணர்ச்சி வர­வேண்­டும். இது­வெல்­லாம் வாசிப்­பூ­டா­கத்­தான் வரும்.
இன்று வடக்கு மாகா­ணத்­தில் கல்­வி­யின் வீழ்ச்சிக்கு இது­வும் ஒரு கார­ணம். மாலை வேளை­யில் வீட்­டில் படிப்­ப­தற்கு பிள்­ளைக்கு நேரம் இல்லை. ரியூ­ச­னுக்­குப் போக­வேண்­டும். இது­வும் எங்­க­ளு­டைய கல்வி வீழ்ச்­சிக்­குக்­கா­ர­ணம்.

வீட்­டில் பிள்­ளை­களை வாசிக்க ஊக்­கப்­ப­டுத் து­வ­தில்லை, நல்ல நூல்­கள் வாங்­கிக்­கொ­டுப்­ப­தில்லை, நல்ல நூல­கங்­க­ளுக்கு அனுப்­பு­வ­தில்லை. ஆசி­ரி­யர்­கள் வாசிப்பை ஊக்­கு­விக்­கும் மனப்­பாங்­கில் இல்லை, பெற்­றோ­ரும் அதற்­குச் சாத­க­மாக இல்லை. இவற்றை எல்­லாம் செய்­யாது விட்­டு­விட்டு பிள்ளை ஒன்­றும் செய்­ய­வில்லை, முன்­னர் போல் இல்லை என்று எல்­லோ­ரும் சொல்­கின்­றார்­கள்.

பிள்­ளை­கள் எல்­லாக்­கா­லத்­தி­லும் அப்­ப­டித்­தான். முன்­னர்­போல் ஆசி­ரி­யர்­கள் இல்லை, தாய் தந்தை இல்லை. இது­தான் பிரச்­சினை. இதை நீங்­கள் விளங்­கி க்­கொள்­ளுங்­கள்– என்­றார்.

You might also like