ஒது­க்­கப்­பட்ட நிதி கிடைக்­கா­மை­யால் திணைக்களங்களின் வேலைகள் மந்தகதியில்

வடக்கு மாகா­ணத்­தில் நடப்பு வரு­டத்­தில் அமைச்­சின் ஊடாக திணைக்­க­ளங்­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரும் செயற்றிட்­டங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி முழு­மை­யாகக் கிடைக்­கா­மை­யால் செயற் றிட்­டங்­களை அடுத்த ஆண்டே நிறைவு செய்ய முடி­யும் என்று மாகாண தலைமை செய­லர் அலு­வ­லகக் கணக்­காய்வுப் பிரிவு தெரி­வித்தது.

இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது.
வடக்கு மாகா­ணத்­தில் துறை சார்ந்த அமைச்­சுக்­க­ளின் ஊடாக திணைக்­க­ளங்­க­ளில் நடப்பு வரு­டத்­துக்கு உரிய வேலைத்­திட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன. ஒவ்­வொரு அமைச்­சுக்­கும் வரு­டாந்­தம் மேற்­கொள்­ளப்­ப­டும் வேலைத்­திட்­டங்­க­ளுக்­கு­ரிய நிதி ஒதுக்­கீடு வரு­டத்­தின் ஆரம்­பத்­தில் வழங்­கப்­ப­டும்.

ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட நிதி­யின் அள­வுக்கு ஏற்ப செயற்றிட்­டங்­கள் திணைக்­க­ளங்­க­ளி­னால் வகுக்­கப்­பட்டு வேலை­கள் நடை­பெ­றும். இவ்­வாறு மேற்­கொள்­ளப்­ப­டும் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு கொழும்பு அர­சின் ஊடாக பகுதி பகு­தி­யாக நிதி வழங்­கப்­ப­டும்.நடப்பு வரு­டத்­தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் வேலைத்­திட்­டங்­கள் நிறை­வு­பெ­று­வ­தற்கு ஒரு­மாத காலத்­துக்­கும் குறை­வான காலப்­ப­குதி உள்ள இந்­த­ நி­லை­யில் திணைக்­க­ளங்­க­ளின் வேலை­களை முடி­வு­றுத்­து­வ­தற்கு நிதி இன்­ன­மும் கொழும்பு அர­சி­டம் இருந்து கிடைக்­க­வில்லை.

இந்த நிதி கிடைக்­கா­மை­யால் நடப்பு வரு­டத்­தில் நிறைவு செய்­யப்­ப­ட­வேண்­டிய வேலைத் திட்­டங்­கள் அடுத்த ஆண்­டும் நடை­பெற வேண்­டிய சாத்­தி­யம் உள்­ளது. வேலைத்­திட்­டங்­கள் நிறை­வ­டைய ஆயி­ரத்து 400 மில்­லி­யன் ரூபா தேவை­யாக உள்­ளது. இது பற்றி அர­சுக்குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தவற விடாதீர்கள்:  தமிழ் அர­சுக் கட்­சிக்­குள் பங்­கீடு குறித்து அதி­ருப்தி

You might also like