மொழி பெயர்ப்புப் பயிற்சியை வடக்கில் ஆரம்பிக்கத் திட்டம்!

வடக்கு மாகாண கல்வி அமைச்­சின், மும்­மொ­ழிக் கற்கை நிலை­யத்­தில்  மொழி பெயர்ப்­புப் பயிற்­சி­நெறியை ஆரம்­பிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன என்று மாகாண சபை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.வடக்கு மாகாணக் கல்வி அமைச்­சின் கீழ் மும்­மொ­ழிக் கற்கை  நிலை­யம் அனைத்துப் பிரி­வி­ன­ருக்­கு­மான மொழிக் கற்­கை­யை கால அடிப்­ப­டை­யில் வழங்கி வரு­கின்­றது.

இந்தக் கற்கை நிலை­யத்­தில்  ஆசி­ய­ மன்­றத்­தின் உத­வி­யு­டன் தமிழ், சிங்­கள மொழி பெயர்ப்பு  வகுப்­புக்­களை நடத்­து­வ­தற்­கு­ரிய உயர் கற்கை நெறி­யான இலத்­தி­ர­னி­யல் கற்­கை­நெறி அலகு நிறு­வப்­பட்­டுள்­ளது.

இதில் மொழி பெயர்ப்புக் கற்கை நெறியை நடத்­து­வது சிறப்­பாக அமை­யும் என்று கல்­விச் சமூ­கத்­தி­ன­ரால்  தெரி­விக்­கப்­பட்­டது.இதற்­கான நிதி உத­வியை ஆசி­ய­மன்­றம் வழங்­கு­கின்­றது.

இதற்­கான அனு­மதி அமைச்­சர் சபை­யில் கிடைக்­கப்­பெற்ற நிலை­யில், தற்­போது ஆளு­ந­ரின் அனு­ம­தியை பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ள­து என மாகாண கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

தவற விடாதீர்கள்:  மாண­வர் மற்­றும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான ஒழுக்­கக்­கோவை மாகா­ண­ச­பை­யில் சமர்ப்­பிக்­கப்­ப­டும்

You might also like