வடக்கு மருத்துவமனைகளுக்கு 110 தாதிய உத்தியோகத்தர்கள்!

வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் கீழ் இயங்­கும் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு புதி­தாக 110 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு 50 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

எனி­னும் வடக்­கில் ஏற்­க­னவே கட­மை­யாற்­று­ப­வர்­க­ளில் 85பேர் வரு­டாந்த இட­மாற்­றம் பெற்று கொழும்பு உள்­ளிட்ட மாகா­ணங்­க­ளுக்­குச் செல்­கின்­ற­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஜீ.குண­சீ­லன் தெரி­வித்­த­தா­வது:வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் கீழ் உள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளில் நில­வும் தாதிய உத்­தி­யோ­கத்­தர் வெற்­றி­டங்­களை நிரப்­பு­மாறு நாம் நீண்­ட­கா­ல­மாக விடப்­பட்ட கோரிக்­கை­யின் பய­னாக 110  தாதி­யர்­கள் வடக்கு மாகா­ணத்­துக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளில் 102பேர் மட்­டுமே கட­மைக்­குச் சமு­க­ம­ளித்­த­னர். வடக்கு மாகா­ணத்­தில் நீண்­ட­ கா­ல­மா­கப் பணி­யாற்­றி­ய­தன் அடிப்­ப­டை­யில் 70 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­கள் தற்­போது வெளி­மா­கா­ணங்­க­ளுக்கு மாற்­ற­லா­கிச் செல்­கின்­ற­னர்.

அந்த வெற்­றி­டங்­க­ளுக்கு சமு­க­ம­ளித்த தாதி­யர்­க­ளில் 70 பேர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­னர். எஞ்­சிய 32 தாதி­யர்­க­ளில் மாகா­ணத்­தில் இயங்­கும் குருதி சுத்­தி­க­ரிப்பு வச­தி­கள் கொண்ட வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு 15 தாதி­யர்­க­ளும், தாதி­யர்­கள் வெற்­றி­ட­மா­க­வுள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு ஏனைய 15பேரும் நிய­மிக்­கப்­ப­ட­ வுள்­ள­னர்  – என்­றார்.

இதே­நே­ரம் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் நீண்­ட­கா­லம் பணி­யாற்­றிய 15 தாதி­யர்­கள் வெளி­மா­கா­ணங்­க­ளுக்கு இட­மாற்­றம் பெற்று வெளி­யே­றும் நிலை­யில் 50 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­கள் கடந்த இரு நாள்­க­ளில் கட­மையைப் பொறுப்­பேற்­றுள்­ள­னர் என யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைப் பணிப்­பா­ளர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார்.   –

You might also like