மைத்திரி– பசில் திடீர்ப் பேச்சு!

இரு அணி­க­ளா­கப் பிள­வு­பட்­டுள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை ஒன்­றி­ணைக்­கும் முயற்­சி­கள் தேக்­க­ம­டைந்­துள்ள நிலை­யில், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ர­ரான பசில் ராஜ­பக்­ச­வுக்­கும் இடை­யில் முக்­கிய பேச்சு இடம்­பெற்­றுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்குப் பசில் ராஜ­பக்ச முயற்­சித்து வரு­கி­றார் என்று சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளா­லேயே குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டு­வ­ரும் நிலை­யில், அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ராக இருக்­கும் அரச தலை­வ­ருக்­கும், அர­சி­யல் எதி­ரி­யா­கப் பார்க்­கப்­ப­டும் பசி­லுக்­கும் இடையே அலை­பே­சி­யூ­டாக இடம்­பெற்­றுள்ள மேற்­படி கலந்­து­ரை­யா­ட­லா­னது கொழும்பு அர­சி­யல் களத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மைத்­திரி மற்­றும் மகிந்த அணி­க­ளைச் சங்­க­மிக்க வைக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்ள வண.மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­யி­ருந்த சூழ்­நி­லை­யில் மேற்­படி அலை­பேசி உரை­யா­டல் இடம்­பெற்­றுள்­ள­மை­யா­னது ஒரு திருப்­பு­மு­னை­ யா­கப் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் எதிர்­கா­லம், இரு­த­ரப்­பா­லும் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­ வ­ரும் பேச்­சு­க­ளின் தேக்க நிலமை உட்­பட மேலும் சில முக்­கிய விட­யங்­கள் தொடர்­பி­லேயே அலை­பேசி ஊடாக இரு­வ­ரும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­னர் என அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் இருந்து அறி­ய­மு­டி­கின்­றது.

தவற விடாதீர்கள்:  வடக்கு – கிழக்கு எம்.பிக்­க­ளின் பட்­டி­ய­லுக்­கும் இனி நிய­ம­னம்!

அரச தலை­வர் தேர்­த­லில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி தோல்­வி­ய­டை­வ­தற்குப் பசில் ராஜ­பக்­சவே பிர­தான கார­ணம் எனக் குற்­றச் ­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள் ­ளது. அத்­து­டன், சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­ யின் முக்­கிய தூணாக இருந்து சுதந்­தி­ரக் கட்­சியை மிரட்­டும் வகை­யில் இவரே செயற்­பட்டு வரு­கின்­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like