சாதனை மாணவர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு

சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி ல.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினராக தேசிய சேமிப்பு வங்கியின் சாவகச்சேரி கிளை முகாமையானர் அ.கெங்காதரம் கலந்து கொண்டார்.

பரீட்சைக்குத் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்திபெற்ற 7 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்ற 40 மாணவர்கள் உட்பட 49 மாணவர்கள் நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

தவற விடாதீர்கள்:  ஒளிவிழாவும் பரி­ச­ளிப்பு விழாவும் 

You might also like